வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை ரவூப் ஹக்கிம் சமர்ப்பிக்கிறார்
யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (9) அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கின்றார்.
இதனூடாக, முன்னர் வாழ்ந்து வந்த தமது பூர்வீக வதிவிடத்தில் வாக்காளர்கள் என்ற அஸ்தஸ்தை பெற்று, தங்களது பிரதிநிதிளை ஜனநாயத் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யும் வாய்ப்பை சட்ட ரீதியாக பெறுவதோடு, பல்வேறு அவசியத் தேவைகளுக்காக தமது இருப்பை அங்கு உறுதிசெய்யும் சந்தர்ப்பத்தையும் பெறுவார்கள்.
அசாதாரண சூழ்நிலைகளில் வெளியேற்றப்பட்ட அல்லது தகுந்த காரணங்களோடு இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை காலமும் எதிர்நோக்கிய வாக்குரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இந்தச் சட்டம் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.
வாக்காளர் பதிவு அவருக்கு கட்டாயம் தேவையான ஒன்று தானனே! அதுதான் ரொம் கஸ்டப்படுகின்றார். முஸ்லிம்களைப் பற்றி கலையில்லை. வாக்கு பற்றிதான் அவருக்கு கவலை. வாக்குறுதிமை மட்டும் தான் இப்போது தேவை. மற்ற விடயங்கள் தேவையில்லைதானே. எது எதற்கெல்லாம் வாய்திறக்கின்றார்கள்.
ReplyDelete