சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் நிலவரங்களை கண்காணிக்கின்றனர் - ஒபாமா
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களின் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
துருக்கி பிரதமர் ரெசெப் தய்யிப் எர்டோகன் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, 'சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அங்குள்ள நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அன்றாட நிகழ்வுகள் தொடர்பாக நமக்கு தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான போதுமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
சிரியாவில் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்கள் நமது பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நமது நட்பு நாடுகள் மற்றும் சிரியாவின் அண்டை நாடுகளுக்கும் ரசாயன ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும்' என்று கூறினார்.
Post a Comment