எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளன - கபே
எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் போட்டியிடுவது மட்டும் எதிர்க்கட்சிகளின் கடமையாகாது என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் நிலவும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான மக்களின் எதிர்ப்பைக் கூட சரியான முறையில் எதிர்க்கட்சிகளினால் வெளிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கங்களுக்காகவே செயற்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மக்கள் அமைப்புக்களின் ஊடாக போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment