சிகிச்சைக்கு உதவி கோரல்
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 4 வயதான முஹம்மது றிப்தி என்ற சிறுவன் பிறப்பிலிருந்தே செவிப்புலன் இன்றியும் வாய் பேசமுடியாமலும் வலது குறைவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இவரை கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக உட்படுத்தியபோது அறுவைச் சிகிச்சை நிபுணரான வைத்தியர் தேவானந்த ஜா, இந்தச் சிறுவனின் வலது குறைவைக் குணப்படுத்தலாமென்றும் அதற்கான அண்ணளவான செலவு ரூபாய் 30 இலட்சம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்று 'நத்தைச் சுருள்' எனும் வலதுக் குறைவினால் வாய் பேச முடியாமலும் காது கேளாமலும் இருந்த பலர் சிகிச்சையின் பின்னர் சிறப்பாகப் பேசக்கூடிய நிலையிலும் காது கேட்கும் நிலையிலும் பூரணமாகக் குணப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏழைகளான இந்தச் சிறுவனின் குடும்பத்தவர்களுக்கு இந்தளவு பெருந்தொகைப் பணத்தைத் திரட்டிக் கொள்வது சாத்தியப்படக்கூடியதொன்றல்ல.
எனினும் சிறுவனின் உம்மும்மா தனது காணித்துண்டொன்றை விற்று பதினொரு இலட்சமும் ஏனைய கொடையாளிகளின் மூலம் சுமார் ஆறு இலட்ச ரூபாவுமாக மொத்தம் 17 இலட்சம் திரட்டப்பட்டுள்ளது.
மீதிப்பணத்தை நண்பர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து திரட்டுவதற்காக ஏறாவூர் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைவரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான அல் ஹாஜ். எம்.எஸ்.எம். நஸீர் அவர்கள் சிறுவனின் தந்தையுடன் இணைந்து அமானா வங்கியில் கூட்டு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் அக்கறை எடுத்துச் செயல்படுவதற்காக அல் ஹாஜ். எம்.எஸ்.எம். நஸீர் அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
நல்லெண்ணம் கொண்ட பரோபகாரிகள் இந்த வங்கிக் கணக்கிற்கு தம்மால் முடிந்த நிதியை அன்பளிப்புச் செய்வதன் மூலம் இந்த வலது குறைந்த சிறுவனின் சிகிச்சைக்கு உதவ முடியும்.
வங்கிக் கணக்கு இல: 0110156537001
கூட்டுக் கணக்கின் பெயர்கள்: M.S.M. NASIR
M.L.B. MOHAMED
அமானா வங்கி, ஏறாவூர்க் கிளை.
Post a Comment