கொழும்பு, யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் - சீனா உதவும்
யாழ் - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு உள்ளிட்ட வீதிகள், நெடுஞ்சாலைகள், தொடருந்துப் பாதைகளை அமைப்பது உள்ளிட்ட போக்குவரத்துத் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள சீனா முன்வந்துள்ளது.
பெய்ஜிங்கில் நடந்த இருதரப்பு பேச்சுக்களிலேயே இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொழும்பு - யாழ். அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், கொழும்பு- கண்டி- குருநாகல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், மாத்தறை - கதிர்காமம் அதிவேக நெஞ்சாலைத் திட்டம் ஆகியவற்றை மேற்கொள்ளவும் சீனா இணங்கியுள்ளது.
மேலும், அத்தனகல, மினுவாங்கொட, குருநாகல பகுதிகளில் நீர்விநியோகத் திட்டங்களில் முதலீடு செய்யவும், கண்டியில் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தை நிறுவவும், அனுராதபுரத்தில் கலையரங்கு ஒன்றை அமைத்துக் கொடுக்கவும், கொழும்பு மற்றும் ராகம மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவும் சீனா உதவ முன்வந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் சீன அதிபர் ஜி ஜின்பின்கை சந்தித்த போது,சிறிலங்காவுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புகளின் போது வர்த்தகம், மற்றும் சுற்றுலாத்துறை ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment