பொத்துவில் பாடசாலையில் 'ஆங்கில வாழ்வகம்' எனும் செயற்பாட்டறை
(அனாசமி)
பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆங்கில மொழியின் அவசியம் உணரப்பட்டு அதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பொத்துவில் கோட்டப் பாடசாலையான கவிவாணர் எம்.ஏ. அஸீஸ்; வித்தியாலயத்தில் ஆங்கிலம் கற்பிக்கின்ற ஆசிரியரான எம்.ஏ. தாஜூன்நிஸா அவர்களின் பெருமுயற்சியின் காரணமாக ஆங்கில வாழ்வியம் எனும் பெயரில் மாணவர்களுக்கான செயற்பாட்டறை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிக்கூடம் (2013.05.16) பொத்துவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ. அஸீஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இப்பாடசாலையின் அதிபர் எம்.எஸ். ஏ. ஹக்கீம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான அல்ஹாஜ். என்.எம்.சம்சுதீன், எஸ்.எல். மன்சூர் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
(இப்படங்களில் பொத்துவில் கவிவாணர் எம்.ஏ.அஸீஸ் வித்தியாலத்தில் ஆங்கில ஆசிரியரான எம்.ஏ. தாஜூன்நிஸா அவர்களினால் உருவாக்கபட்டுள்ள 'ஆங்கில வாழ்வகம்' எனும் காட்சிக்கூடத்தை பொத்துவில் கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.ஏ. அஸீஸ் நாடாவை வெட்டித் திறந்துவைப்பதையும், அருகில் ஆசிரிய ஆலோசகர்களான என்.எம்.சம்சுதீன், எஸ்.எல்.மன்சூர் மற்றும் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் அருகில் நிற்பதையும், கூடத்தினுள் அமைக்கப்பட்டுள்ள கற்றலுக்கான உபகரணங்களை அதிகாரிகள் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.)
Post a Comment