Header Ads



பாகிஸ்தானில் தேடப்பட்டவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்


பாகிஸ்தானால் தேடப்பட்டு வந்த  சந்தேகத்துக்குரியவரை இந்தியா இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இலங்கை வந்தப்பின்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அவர் ஆந்திர பிரதேசத்தில் உரிய விசா அனுமதியின்றி வசித்து வந்த நிலையிலேயே கடந்த 6 ஆம் திகதி இந்திய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

34 வயதான நிசார் அஹ்மட் என்ற இவர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை அதிகாரிகளால் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிடிஐ செய்திசேவை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.