Header Ads



மாகாணசபைகளை ஒழிக்க அவசர சட்டத்திருத்தம் - ஜாதிக ஹெல உறுமய முயற்சி


அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை செயலிழக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஜாதிக ஹெல உறுமய முடிவு செய்துள்ளது. 

ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அந்தக் கட்சியின் பிரதிச்செயலர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

13வது திருத்தச் சட்டத்தை செயலிழக்க வைப்பதற்கான நகர்வை தாம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். 

“வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தினால், தமிழீழத்தை அமைப்பதற்கு இடமளித்ததாகி விடும் என்று நாம் அரசாங்கத்தை எச்சரித்தோம். விடுதலைப் புலிகள், போரின் மூலம் அடைய முடியாது போனதை தேர்தல் மூலம் அடைவதற்கு அது இடமளித்ததாகி விடும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

இந்திய - சிறிலங்கா உடன்படிக்கைக்கு அமைய 13வது திருத்தச்சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, மாகாணசபைகளையே ஒழிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

1 comment:

  1. ஜாதிக ஹெல உறுமய நினைப்பதெல்லாம் உடனே நடப்பதற்கு இது என்ன அவங்க வீட்டு கக்கூசுக்கு கதவு போடும் விடயமா? மதவெறி இனவெறிவேண்டாம் இனிமேலும் ஒரு யுத்தம் வெண்டாம் அது மிகவும் அழிவை உண்டாக்கிவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.