Header Ads



இலங்கையில் இஸ்ரேலியர்களின் தலையீடு அதிகரித்துள்ளது - என்.எம்.அமீன்


இலங்கையில் இஸ்ரேலியர்களின் தலையீடு அதிகரித்துள்ளது என பலஸ்தீன இலங்கை ஒருமைப்பாட்டு இயக்க உப தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார். பலஸ்தீன அல் நக்பா தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார். 

பலஸ்தீன இலங்கை ஒருமைப்பாட்டு இயக்க உப தலைவர் என்.எம்.அமீன் கருத்துத் தெரிவிக்கையில்,

 65 வருடங்களாக பலஸ்தீனர்களது பிரச்சினை நீடித்து வருகிறது. இந்தநிலைமை தொடருவதையிட்டு ஜனநாயகத்தை மதிப்போர், சுதந்திரத்தை மதிப்போர் வெட்கப்படவேண்டும்.

உலகில் 135 நாடுகளின் அங்கீகாரத்துடன் பலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர பலஸ்தீனத்தை உடன் உருவாக்குவதற்குசுதந்திரத்தைமதிக்கும் சகலரும் உதவவேண்டும். 

பலஸ்தீனர்களது சுதந்திரத்துக்காக இலங்கையில் மாறிமாறி பதவிக்குவந்த அரசாங்கங்கள் உதவிவந்துள்ளன. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தில் வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது ஆரம்பித்து அவர்களுக்காகக் குரல் கொடுத்துவந்தார். இன்று இலங்கையில் இஸ்ரேலியர்களின் தலையீடு அதிகரித்துள்ளது குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைபலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தின் இணைச் செயலாளர்களான நந்தகருதனதிரி மற்றும் ஹமீத் அப்துல் கரீம் ஆகியோரும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். 

No comments

Powered by Blogger.