கிழக்கு மாகாண முதலமைச்சரின் 'தீர்வைத் தேடிய தரிசனம்'
கிராம மட்டங்களில் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில்
அப்பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களில் குறைகளை கேட்டறிந்து ஏராளமான பிரச்சினைகளுக்கு அவ்விடத்திலேயே தீர்வுகாணும் நடவடிக்கையினை கிழக்கு முதல்வர் ஆரம்பித்துள்ளார்.
இதன் ஒருகட்டமாக தம்பலகமம், முள்ளிப்பொத்தானை பிரதேச மக்களை கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பு தம்பலகம பிரதேசசபை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.
முதலமைச்சரின் இம்முன்னெடுப்பு குறித்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட தம்பலகம பிரதேசசபை தவிசாளர் எம்.சுபியான் கருத்துதெரிவிக்கையில்,
பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதலமைச்சர் தம்பலகம பிரதேசமக்களின் தீர்க்கப்படாத பல பலபிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுகொடுத்துள்ளதாகவும் இதன்மூலம் பெரிதும் பலனடைந்துள்ள அப்பிரதேச மக்கள் சார்பில் தான் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளவதாகவும் கூறினார்.
Post a Comment