Header Ads



மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் கோரிக்கை

(அனா)

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய டீசல் மாணிக் கூப்பன் காலம் தாழ்த்தி வழங்கப்படுவதால் மீனவர்கள் பல்வேறு அசொளகரியங்களை எதிர் நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம்.முனவ்வர் கையப்பம் இட்டு இது தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஒரு வருடகாலமாக எரிபொருளின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்பட்டதால் மீனவர்களின் நன்மை கருதி கடற்றொழில் நீரியழ் வளத்துரை அமைச்சினால் எரிபொருள் மாணியக் கொடுப்பணவுகள் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது. 

ஆனால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட வேண்டிய மாணியக் கூப்பன் சில மாதங்கள் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டமையும் ஒவ்வொரு பிரதேசத்தின் அண்மையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு மார்ச் மாதத்திற்குறிய மாணிக் கூப்பன்களின் கணக்கு இலக்கம் மீன்பிடித் திணைக்களத்தினால் மாற்றப்பட்டு மே மாதம் வழங்கப்பட்டமையால் மீனவர்கள் மீன்படித் துறைமுகத்திற்கு முழுமையாக பணத்தினைச் செலுத்தி எரிபொருள் மாணியம் மூலம் கிடைக்கும் நிவாரணத்தை பெறவேண்டியுள்ளது.

ஆனால் கடற்றொழிலில் ஈடுபடும் வறிய மினவர்களுக்கு சாத்தியமில்லாத கஸ்டமான நிலையினை தோற்றுவித்திருப்பதோடு மீனவர்களுக்கான ஏப்ரல் மே மாதங்களுக்குறிய மாணியம் வழங்கப்படாமையால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கூடுதலான பணத்தினை எரிபொருளுக்கு மாத்திரம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் கடற்றொழிலில் ஈடுபடும் சில சிறிய, பெரிய மீன்பிடிப் படகுகளுக்கான டீசல் மாணிய முத்திரை முற்றாக தடைப்பட்டமையும் முப்பது வருடகால யுத்த சூழ் நிலையில் வாழ்ந்த மீனவர்களுக்கு பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர் எனவும் அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.