Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தேர்தல் ஆயுதம் 'கத்னா' - ஆருடம் கூறும் உதுமாலெப்பை


(ரீ.கே.றஹ்மத்துல்லா)

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் தேசிய காங்கிரஸின் தேசியத்தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தனக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அமைதி நிலவுவதற்கும், நமது கிழக்கு மாகாணத்திற்கென தனியான ஒரு மாகாணசபை உருவாக்கப்பட வேண்டும் என துணிச்சலுடன் குரல் கொடுத்ததுடன் கிழக்கு மாகாணத்தில் முடிந்தளவு அபிவிருத்தி பணிகளை இன மத பேதமின்றி மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை நெசவாலை மத்திய வீதியை கொங்கீட் வீதியாக புனரமைக்கும் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய காங்கிரசின் மத்திய குழுவின் உப தலைவர் எஸ்.டி.சம்சுடீன் ஆசிரியர் தலைமையில் இன்று(29) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கென அரசியல் அதிகாரம் வழங்கப்படும் என  நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி வந்தன. ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள்  அளித்த வாக்குகளுக்கு அரசியல் அதிகாரமோ, அபிவிருத்தி பணியோ நீண்ட காலமாக அட்டாளைச்சேனை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி சபை அமைச்சருமான  ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களின் தூர சிந்தனையால் அரசியல் அதிகாரம் இல்லாமல் ஏமாற்றப்பட்டு வந்த அயல் பிரதேசங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால் நமது பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் இரண்டு தடவைகள் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டன. தேசிய காங்கிரஸின் தேசியத்தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களின் வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களும் பயன்படக்கூடிய பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அட்டாளைச்சேனைப் பிரதேச அபிவிருத்தியிலும் நீண்ட காலமாக நாம் பணி புரிந்து வருகின்றோம். 

எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களையும், இயற்கை  அனர்த்தங்களிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் அடையாளம் கண்டு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 

அண்மையில் அட்டாளைச்சேனை பொதுமைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் றவூப்ஹக்கீம் அட்டாளைச்சேனையை சேர்ந்த மாகாண அமைச்சர் எல்லா பிரதேசங்களிலும் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவருகின்றார். ஆனால்  அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை மட்டும் புறக்கணிப்பதாக இவ் விளையாட்டு மைதானத்தின் வரலாறு தெரியாது சிறு பிள்ளைத்தனமாக பேசிவிட்டுச் சென்றுள்ளார். 

அட்டாளைச்சேனை பொதுவிளையாட்டு மைதானம் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களினால் உருவாக்கப்பட்டது. அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக நான் பதவியில் இருந்த போது தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களுடன் தொடர்பு கொண்டு விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ததுடன், விளையாட்டு மைதானத்திற்கென இரண்டு ஏக்கர் காணியும் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்திக்கு பல உதவிகள் வழங்கியுள்ளேன். மின்சார இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இவ் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முதல் முதலாக கரையோர பிரதேசத்தில் மாகாண மட்ட விளையாட்டு போட்டி நிகழ்ச்சியை அட்டாளைச்சேனையில் நடாத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தேன் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அதற்கான அனுமதியையும் வழங்கினார். முஸ்லிம் காங்கிரஸ்சைச் சேர்ந்த பிரதேச சபையினரும், சில அதிகாரிகளும் இணைந்து அந்த நிகழ்ச்சி ஊடாக விளையாட்டு மைதானம் அடைய இருந்த அபிவிருத்தி திட்டங்களை இல்லாமல் செய்ததுடன் சிறந்த முறையில் நடைபெற இருந்த மாகாண மட்ட விளையாட்டு நிகழ்ச்சியினை மலுங்கடிக்கச் செய்தனர் என்பதனை நமது மக்கள் நன்கு அறிவார்கள். தமது மக்களின் வாக்குகளை பெற்று பதவிகளுக்கு வருகின்ற அரசியல் தலைமைகள் தமது நாட்டையும், மாகாணத்தையும், மாவட்டத்தையும், தனது பிரதேசத்தையும் உண்மைக்கு உண்மையாக நேசித்து அந்த மக்களின் தேவையை அறிந்து நன்கு திட்டமிட்டு சிறந்த முறையில் பணிபுரியகூடியதாக இருத்தல் வேண்டும். மக்களுக்கு எப்போதும் நல்லதை செய்வதற்கு சிந்திக்க வேண்டும் நமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல பணியினை புரிய வேண்டும். 

2010ம் ஆண்டு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பிரதேச சபை தவிசாளரின் வரவேற்பு விழாவின் போது கலந்து கொண்டு உரையாற்றிய நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் இனிமேல் அட்டாளைச்சேனைப் பிரதேச அபிவிருத்தியின் உச்சத்தினை அடையும் எனவும் குறிப்பாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, பொதுவிளையாட்டு மைதானம் போன்றவற்றினை நாம் பிரமாண்டமான முறையில் அபிவிருத்தி செய்து காட்டுவோம் என்று நெஞ்சை நிமிர்த்தி பகிரங்க கூட்டத்தில் பேசி விட்டு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல்லும் நட்டு பல வருடங்கள் சென்றும் இதுவரை  எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதனை நமது மக்கள் நன்கு அறிவார்கள்.

நாங்கள் அபிவிருத்திப் பணியை மேற்கொள்ளும் போது அரசியலுக்கு அப்பால் சிந்தித்து நமது எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக தியாக மனப் பாங்குடன் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். அடுத்த தேர்தலை இலக்காக கொண்டோ தெரிவு வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவோ நாம் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவதில்லை. நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட ஏழைமக்கள் வாழும் பிரதேசங்களை அடையாளம் கண்டு பயன்பெறக்கூடிய வகையிலே பாரிய அபிவிருத்தி பணிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஏழை மக்களின் பிராத்தனைகள் எங்களை பாதுகாக்கும் நிரந்தர புண்ணியமும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் நாம் இவ்வாறான பணிகளை செய்து வருகின்றோம்.

பிரதேசங்களில் நாம் வரலாற்றுப்பணிகளை செய்த போதும் கடந்த மாகாண சபை தேர்தல்களின் போது பள்ளிவாசல் உடைக்கப்பபடுகின்றதாக இனவாத கருத்துக்களைக் கூறி எங்களுக்கு மக்கள் வாக்களிக்காத நிலையை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கினார்கள். எவ்வளவுதான் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்ட போதும் தேர்தல் காலங்களில் உணர்ச்சிகளை ஊட்டி நமது முஸ்லிம் மக்களது வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ், பல யுக்திகளை கையாண்டு பெற்று வருகின்றது. சில  வேளை அடுத்த தேர்தல் ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸ் வந்து, முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் ''கத்னா'' செய்ய வேண்டும் என்றால் வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற உணர்வுகளை ஊட்டினால் நமது முஸ்லிம் சகோதரர்கள் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்காத நிலை உருவாகாலாம். ஆனால் தொடர்ச்சியாக நமது முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது விரைவில் நமது மக்கள் விழித்து விடுவார்கள் .

முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்திற்காகவே மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் என்றும் செயற்படும் என்று கூறி வந்த தலைவர் அஸ்ரபினால் மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதிலும், மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்களிலும் சளைக்காது சேவை செய்து காட்டினார். ஆனால் அன்னாரின் மறைவுக்குப்பின்னர் ரவூப் ஹக்கீம் மக்களுக்காக எந்தவுரிமையையோ, அபிவிருத்தி விடயங்களையோ செய்ய முடியாத ஒரு தலைமைத்துவமாக இருந்து வருகின்றமை அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகக் காணப்படுகின்றது. எனவே இன்று எமது நாட்டை பொறுத்தளவில் அரசியல் ரீதியாகவே நாம் பலம் பெற்று எமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆக அரசியல் வாதிகளை வழிநடத்தும் பொறுப்பு மக்கள் கைகளிலேயே  காணப்படுகின்றது. அதனை மக்கள் உணர்ச்சி வசப்படாமல் நன்கு சிந்தித்து பயன்படுத்தி கொள்ளவேண்டும். இன்று மக்கள் நன்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தலுக்கு இலக்காகி தவறான அரசியல் பிரசன்யத்திற்கும், எமது எதிர்கால பின் சந்நதியினருக்கும் வரலாற்றுத் துறோகம் செய்பவர்களாகவே இருக்கின்றனர் என்றார்.

5 comments:

  1. சோனிகாக்காமாருக்கு புத்திகாணாதத்தாலதான் இத்தனை பிரிவு. நமக்கு இன்டைக்கு இருக்கிற பிரச்சினைக்க கொங்க்றீட் றோட் செய்ரத்துக்கு ஒரு மேடை, அதுக்குள்ள ஒரு அர‌சியல். கட்சி கட்டடம், தூரனோக்கு. என்ன புத்தி? நாளைக்கு அவன் மாடு அறுக்க தடுத்து தனினபர் பிரேரணை கொன்டவரப்போறான், கறுப்பு பர்தா, காளிக்கோட், தீக்குழிப்பு என 1000 பேர் ரெடியாம், பதுளையில் ஆர்ப்பாட்டம், மஹஜர் கொடுக்கிறானுகள். எப்படியொ செய்திகள் பரப்பி விடயத்தை மக்கள் மயப்படுத்துறானுகள், அரசு வாய்திறக்கவில்ல. கூட்டுக்கட்சிகளும் கத்துது, நமக்கு தலைக்க வரவேன்டிய வேலைக்க கதைக்கிற டொபிக்கபாரன். இந்த பலாய்கள விட்டுட்டு சமூக நலன பாருங்கொ அமைச்ரே, இல்லாட்டி மாஹாண மெம்பெர்களுக்கு 500 கொடுப்பனவு கூட்டினா அதுக்கொரு பத்திரிகையாளர் நமானாடு நடத்திபேபெர்ல போடுவயலா? நம்ம சமூக நலன் இதுல விளங்குது, சாக்கடை....

    ReplyDelete
  2. இப்படித்தான் 2006ம் ஆண்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக அதாவுல்லா பதவியேற்றவுடன் அவரது மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் 'காத்தான்குடி பிரதேச வடிகான்களெல்லாம் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படும்' என்று 'டமார்' அறிக்கை விட்டார். வருஷம் 7 ஆகிறது...

    இப்போது அமைச்சர் அதாவுல்லா உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சராக உள்ளார். காத்தான்குடி நகர சபையில் ஊழலும், மோசடியும், அதிகாரத் துஷ்பிரயோகமும் தாண்டவமாடுகிறது. இவர் என்ன செய்கிறார்..? என்ன செய்து கொண்டிருக்கிறார்..?

    நாளை (30.05.2013) காலை 08:00 மணிக்கு காத்தான்குடி இஸ்லாமிய கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் அராஜகங்களை எதிர்த்து ஒரு கவனஈர்ப்பு நடவடிக்கையை சுயேட்சைக்குழு 01 ஏற்பாடு செய்துள்ளது.

    அமைச்சர் அதாவுள்ளா என்ன செய்கிறார்..? எங்கே இருக்கிறார்..??

    ஊருக்கு மாத்திரம் சேவை செய்யும் அமைச்சருக்கு "தேசிய" காங்கிரஸ் எதற்கு? என்று கேட்கத் தோணுகிறது..

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. Please you all are do politic but don’t use marhoom asraf sir name because he is a grade person Now no body like him all fraud.

    ReplyDelete
  4. நானா? நீயா என்ற போட்டி பொறாமையிலேயே முஸ்லிம் அரசியல் வாதிகளின் பதிவேடு நிறைகிறதே. மறுமையில் இவர்களின் நிலை என்னவாகுமோ?????

    ReplyDelete
  5. Kathna ,kaban enru pesinathane aduththa muraiyum neenga minister aahalam

    ReplyDelete

Powered by Blogger.