Header Ads



தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் வபாத்


(Tm) திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, கட்டையாற்று பிரதேசத்தில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் ஒருவன் இன்று வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளான்.

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஜிப்ரி அகீல் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சிறுவனின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் செய்து வருவதாலும் தந்தை கொழும்பிலுள்ள கடையொன்றில் தொழில் செய்து வருவதாலும் அம்மம்மாவின் பராமரிப்பிலேயே இச்சிறுவன் இருந்து வந்துள்ளான். 

3 comments:

  1. Inailaahi wainna ilaihi rajuhoon.

    ReplyDelete
  2. mawthu allarukum undu a nal kanvan tholil sheum pothu pondaty annathuku wilila pohanum ithuku muluka karanam umma wappa than

    ReplyDelete
  3. பாவம்.10 வயது சிறிய குழந்தையின் உயிர் பிரிகிறது. தாயும் பக்கத்திலில்லை. தந்தையுமில்லை. பரிதாபம்.

    ReplyDelete

Powered by Blogger.