உகண்டாவில் ஜனாதிபதி மஹிந்தவினால் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறந்துவைப்பு
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உகண்டா ஜனாதிபதி யோவேரி முஸவேனியும் ஒன்றிணைந்து- கம்பாலாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை உயர் ஸ்தனிகராலயத்தை இன்று (13) திங்கட்கிழமை திறந்துவைத்தனர்.
இது உலக நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையி;ன் 62 ஆவது இராஜதந்திர செயலகமாகும். ஆபிரிக்க நாடுகளில் அமைக்கப்பட்ட மூன்றாவது செயலகமாகும்.
திறப்பு விழாவுக்கு வருகை தந்த இரு நாட்டு ஜனாதிபதிகளையும் உகண்டாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ரி. ரவீந்திரன் மற்றும் இலங்கைக்கான உதவித் தூதுவர் வீ. கனநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தூதுக் குழுவினருக்கு என்டபே அரச மாளிகையில் நேற்று இரவு உகண்டா ஜனாதிபதி இராப் போசன விருந்தளித்து கௌரவித்தார்.
Post a Comment