Header Ads



இளைஞர் யுவதிகளுக்கான இலவச வானொலி கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரல்


வானொலி நாடகத்தில் இளைஞர்களைப் பயிற்றுவித்து அவர்களின் வாயிலாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை வெளிக்கொண்டுவரும் செயற்றிட்டம் ஒன்றை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இலவசமாக நாத்திவருகின்றது. 

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் சமூக வலுவாக்கத்துக்கான மற்றுமொரு வானொலி நாடகப் பயிற்சிப்பட்டறையொன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. யுத்த்ததுக்குப் பின்னர் யாழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள்,மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சகவாழ்வு தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிய முக்கிய கவனம் செலுத்துவதாக இவ்வானொலி நாடகப் பயிற்சிநெறி அமையும். 

மக்ளுடைய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வானொலி நாடகத்தினூடாக எடுத்துக் கூறுவதும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மூலத்தை, தன்மையை அறிந்து அவற்றை ஊடகத்தினூடாக வெளிக்கொண்டுவரும் இளைஞர்களை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

கலை, இலக்கிய, ஊடக மற்றும் சமூக பிரச்சினைகள் பற்றிய ஆர்வுமுடைய இளைஞர், யுவதிகள் இப் பயிற்சிப்பட்டறைக்கு விண்ணப்பிக்கலாம். சமூக பிரச்சினைகளை இனங்கண்டு கொள்ளும் இரு நாள் கள ஆய்வு,பத்து நாட்களுக்கான வானொலி நாடகவாக்கப் பயிற்சி மற்றும் கொழும்புக்கான ஊடக சுற்றுப் பயணம் என்பன இப்பட்டறையில் உள்ளடங்கும். தெரிவு செய்யப்படும் 20 இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக பயிற்சி,தங்குமிடம், உணவு வழங்கப்படுவதுடன் போக்குவரத்துச் செலவுகளும் வழங்கப்படும். இப்பயிற்சிநெறி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.

இப்பயிற்சிநெறியில் கலந்து கொள்ளும் ஆர்வமுடையவர்கள் தாம் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதன் நோக்கம் என்ன?, பயிற்சிநெறியில் எவ்வகையான ஆற்றலை பெற்றுக்கொள்ள முனைகிறீர்கள்? மற்றும் இப்பயிற்சி நெறியில் கிடைக்கும் அறிவினை யாழ் மக்களுடைய நலனுக்காக எவ்விதம் பயன்படுத்துவீர்? ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதுடன், விருப்புக் கடிதத்தில் தங்களுடைய தொலைபேசி இலக்கத்தினையும் குறிப்பிட்டு, இவ்வறிவித்தல் பிரசுரிக்கபட்டு 10 நாட்களுக்குள்,info@ldjf.org என்ற மின்னஞ்சல் முகரிக்கு அல்லது தபால் மூலம் கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

SDJF
8 / 5, Liyanage Mawatha, Nawala, RAJAGIRIYA.

மேலதிக தொடர்புகளுக்கு 0117209511 என்ற இலக்கத்துக்குத் தொடர்பு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.