மகிந்த சிந்தனை ஆபத்தில் உள்ளது, கோட்டா சிந்தனை மூலம் அது நிழலடிப்பு..!
(தேனீ)
கலாநிதி. தயான் ஜயதிலகாவுடன் சமிந்த குறுப்பு நடத்திய நேர்காணல்
பகுதி - 1
பிரபாகரனையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யையும் அடையாள சின்னமாக உயர்த்திப் பிடித்து கிளர்ச்சி செய்யும் தமிழ் நாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும், வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள், அவர்கள் இந்த அச்சுறுத்தலை எளிதாக நினைவில் கொள்வார்கள். எனினும் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து வருகின்றன, இறுதியாக அவர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது, அவர்கள் ஸ்ரீலங்காவாசிகள் அதன் குடிமக்கள் என்ற விதத்தில் மட்டும் அல்லாது சிங்களவர்கள் என்கிற விதத்திலும் வாக்களிப்பார்கள். தங்களுக்கு நாணத்தக்க இருண்ட கடந்த காலத்தை நினைவூட்டும் ஒருவருக்கு அவர்கள் நிச்சயமாக வாக்களிக்கப் போவதில்லை.
“மகிந்த சிந்தனை ஆபத்தில் உள்ளது, கோட்டா சிந்தனை மூலம் அது நிழலடிப்புச் செய்யப்படுவது அதிகரித்துள்ளது” என வலியுறுத்துகிறார், ஸ்ரீலங்கா இராஜதந்திரியும் மற்றும் அரசியல் விஞ்ஞ}னியுமான கலாநிதி. தயான் ஜயதிலகா. ஜனாதிபதி ராஜபக்ஸ தனது அதிகாரத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் அளவுக்கு அதிகமாக பகிர்ந்தளித்துள்ளார் என அவர் எச்சரிக்கையும் விடுக்கிறார். “யாருடைய கை தொடர்ந்தும் சுக்கானை பிடித்திருக்கிறது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. உண்மையில் கொள்கையை இயக்குபவர் யார் என்று நிச்சயமாகத் தெரியவில்லை”. நாடு ஒரு உள்ளக ஆட்சிமாற்றத்தை அனுபவித்து வருகிறது என்று கலாநிதி. தயான் ஜயதிலகா சுட்டிக்காட்டுகிறார். புவியீர்ப்பு மையமானது ஜனரஞ்சக கொள்கைப் பிடிப்புள்ள மகிந்த ராஜபக்ஸவிடமிருந்து கடினமும் கடுமையும் நிறைந்த புதிய பாரம்பரியத்தின் கைகளுக்கு நகர்ந்துள்ளது, அது மிகவும் வெளிப்படையாக கோத்தபாய ராஜபக்ஸவினால் பிரதிநிதித்துவ படுத்தப்படுகிறது.
கீழேயுள்ளவை அந்த நேர்காணலில் இருந்து எடுத்தாளப்பட்டவைகள்:-
கேள்வி: யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களாகிவிட்டன. அதிலிருந்து நாங்கள் அடைந்துள்ளவைகளையிட்டு நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?
பதில்: ஆம் மற்றும் இல்லை. ஸ்ரீலங்கா தேசமும் மற்றும் அதன் பிரஜைகளும் எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து வெற்றிகொள்ளப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு சிறிய விடயமல்ல. அப்போது அங்கு ஒரு யுத்தம் நடைபெற்றது. பல தசாப்தங்களாக பாரியளவிலான பயங்கரவாதம் இருந்தது. ஆனால் அந்த மிகவும் ஆபத்தான பயங்கரவாதத்தை தோற்கடித்து ஸ்ரீலங்கா வெற்றிபெற்றது. அதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால் அந்த சமாதானத்தை நாங்கள் எப்படி வீணாக்கிவிட்டோம் என்பதற்காக நான் அளவற்ற மனவருத்தம் அடைகிறேன். நாங்கள் என்று இங்கு நான் குறிப்பிடுவது எங்களது பிரஜைகள் என்கிற அர்த்தத்தில் அல்ல, ஏனெனில் குடிமக்கள் இங்கு தவறு செய்யவில்லை. நாங்கள் என்கிற அடைமொழியில் நான் குறிப்பிடுவது ஸ்ரீலங்கா தேசத்தையும் மற்றும் எங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தையும்தான். ஸ்ரீலங்கா யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை அத்தோடு சமாதானத்தை வெல்வதற்கான பாதையில் அது பயணம் செய்யவும் இல்லை. உண்மையில் சமாதானத்தை தொலைப்பதற்கான ஒரு பாதையில்தான் இப்போது நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இழந்துவிட்ட ஏராளமான சந்தர்ப்பங்களுக்காக நான் ஆழ்ந்த மனவேதனை அடைகிறேன். மனித உரிமைச் சமூகம், மற்றும் மேற்குலகத்தினர் மேற்கொள்ளும் விமர்சனங்களை ஒருபுறமாக ஒதுக்கிவிடுவோம். அனால் இதில் சோர்வுதரும் விடயம் என்னவென்றால் நாங்கள் ஆசியாவில் உள்ள எங்கள் நண்பர்களை ஏமாற்றிவிட்டோம். ஆசியாவை வேகமாக மேலெழும் ஒரு கண்டமாக எடுத்துக் கொண்டால், இந்த மேலெழுகைக்கு உதவும் இருபெரும் இயந்திரங்களாக இந்தியாவும் மற்றும் சீனாவும் உள்ளன. 2009ல் இந்த இரு நாடுகளுமே எங்கள் நண்பர்களாக இருந்தார்கள். இந்த இருபெரும் இயந்திரங்களையும் பயன்படுத்தி அந்த மேலெழுகையில்; நாங்களும் பங்கு வகித்திருக்கலாம். ஆசியாவின் மறுமலர்ச்சியில் நாங்களும்; ஒரு அங்கமாகி இpருக்கலாம். ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை. இனரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட நீதியான ஒரு பல்கலாச்சார சமூகத்துக்கு அது முன்னுதாரணமாக அமைந்திருக்கும், ஆனால் யுத்தத்துக்கு பின்பு நாங்கள் அந்த வகையான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவில்லை.
நாங்கள் சமூக ரீதியாகவும் மற்றும் கலாச்சார ரீதியாகவும் மிகவும்; பின்னோக்கிச் செல்கிறோம் மொத்தத்தில் ஒரு எதிர்மறையான வளர்ச்சி. அதையிட்டு நான் வருத்தமடைகிறேன், ஆசியா தனது இரு கரங்களையும் நீட்டி எங்களை வரவேற்க விருப்பமுடன் தயாராக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் எங்கள் முயற்சிக்கு ஆசியா முழு அதரவையும் வழங்கியது. ஆனால் நவீன ஜனநாயக ஆசியாவில் நாங்கள் எங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவில்லை, அதனால் முப்பதுக்கு மேற்பட்ட வருடங்களாக நாங்கள் இழந்தவற்றை திரும்ப பெறும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம். எனது உணர்ச்சிகள் ஆழமான இரட்டைத் தன்மையானதாக உள்ளது, யுத்தத்தில் வெற்றிபெற்றதையிட்டு சாதகமாகவும், ஆனால் தற்போது நாங்கள் உள்ள நிலமையையிட்டு மிகவும் வருத்தமாகவும் உள்ளது. அறிவார்ந்த வகையிலும் மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் பீடிக்கப்பட்டிருக்கும் விரும்பத்தகாத ஒரு நோய். எந்த ஒரு நாட்டினதும் பொருளாதார அதிசயத்துக்கு அவசியமான பங்காக இருக்கக்கூடிய, இரண்டாவது புலம்பெயர் தலைமுறையை சேர்ந்த நன்கு படித்த இளைஞர்களால் நாங்கள் பெரிதும் கவரப்படவில்லை.
கேள்வி: எந்த இடத்தில் தவறு நேர்ந்தது? ஏன் அது இந்த வழியில் சென்றது?
பதில்: இந்த எதிர்மறையான வளர்ச்சியில் சென்று கொண்டிருப்பது எங்களது சமூகம் மாத்திரமல்ல. ஜூன் 1967ல் இஸ்ராயேல் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் அந்த வெற்றியை பெரிதும் பாராட்டின. ஆனால் இஸ்ராயேல் அந்த வெற்றியை விவேகமான முறையில் அரசியல் மூலதனமாக முதலீடு செய்யவில்லை. அவர்களது தலைமை மிகவும் சிறந்த ஒன்று, ஆனால் எந்த வழியில் முன்னோக்கிச் செல்வது என்கிற எண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை. தெளிவின்மை பற்றிய குறைபாடு, அல்லது வேறு சிலவற்றால் வியத்தகு தலைமையின் இயல்பாக அது மாறியிருந்தது, அதன் காரணமாக இஸ்ராயேல் சமூகத்தில் இருந்த சில குறிப்பிட்ட கடும்போக்கு சக்திகளுக்கு, 1967ல் யுத்தத்தில் வெற்றிபெற்ற இஸ்ராயேல் தலைமையின் மூலோபாயத்தில் ஒரு பகுதியாக இல்லாத, குடியேற்றங்கள் மற்றும் இணைப்புகளை உட்புகுத்த இயலுமாக இருந்தது. ஆனால் அந்த பாதையில் முன்னேறிய இஸ்ராயேல், 40 அல்லது 45 வருடங்கள் கழித்து அதன் நெறிமுறை, தத்துவரீதியாகவும் மற்றும் மூலோபாயரீதியாகவும் அந்தப் பிராந்தியத்தில் தனிமைப்பட்டிருப்பதை காணநேர்ந்தது.
ஸ்ரீலங்கா, இஸ்ராயேல் அல்ல, நாங்கள் அதைவிட மிகவும் பலவீனமானவர்கள். இஸ்ராயேல் கொண்டிருப்பதைப்போல உலகின் அதியுயர் சக்திகளின் திறந்த - முனை நடவடிக்கைகள் எங்களிடம் இல்லை. ஆனாலும் அதேபோன்ற ஒரு தவறைத்தான் நாங்கள் செய்துள்ளோம். போரினால் கிடைத்த அரசியல் மூலதனத்தை நாங்கள் வீணாக்கிவிட்டோம். அது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்? நாங்கள் ஒரு செல்லும் வழியை தீர்மானிக்கவேண்டிய ஒரு சாலைகளின் சந்திப்பில் இப்போது நிற்கிறோம். ஒருபுறம் யுத்தத்தில் எங்களுக்கு உதவிய நண்பர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பாதையில் முன்னோக்கிச் செல்வது. 2009ல் நடந்த ஜெனிவா கருத்தொருமிப்பில் இதற்கான அழைப்பை நான் விடுத்திருந்தேன். போருக்கான காரணங்களை நாங்கள் ஆழமாக ஆய்வு செய்து அவைகளை களைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழு வழங்கிய சந்தர்ப்பம் மூலம் இது உதயமாகியது. இது யுத்தத்தின் பின்னான எங்களது செயல்பாடாக இருந்திருக்க வேண்டும், உண்மையில் இதை நாங்கள் விரைவுப் பாதையில் நடைமுறைப்படுத்தி இருக்கவேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை நாங்கள் விரைவுப் பாதையில் அமல்படுத்தியிருக்க வேண்டும். அரசாங்க மற்றும் அரச கருவிகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளுக்கு நெருக்கடி ஏற்படும் விதத்தில் அதற்கு எதிராகச் சக்திவாய்ந்த குரல்களை எழுப்பின.
ஆகவே இப்படியான ஒரு பாதையில்தான் அசோக மன்னர் பயணித்தார். நான் ஒரு பௌத்தனாக இல்லாவிட்டாலும் இதைத்தான் உண்மையான பௌத்த பாதை என் நான் அழைக்கிறேன், இதை நான் ஒரு தத்துவ கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். உறுதியான ஒரு சமரசத்தையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஒரு உண்மையான பௌத்தம் போதிப்பதைக் காட்டிலும் வேறு எந்தக் கொள்கையும் மானிடத்துக்கு வழங்கவில்லை. ஆனால் அது உண்மையான பௌத்தம,; அது களங்கம் நிறைந்த எந்த மேலதிக இணைப்பையும் இனங்களுடன் சேர்க்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அது உண்மையான பௌத்தம் ஆனால் சிங்கள பௌத்தம் அல்ல. ஆனால் நாங்கள் அந்தப் பாதையில் செல்லவில்லை. நாங்கள் மற்றொரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம், குறுகிய நோக்கம் கொண்ட ஒரு பாதை, அதை ஒரு நவீன பழமைவாதம் என நான் வகைப்படுத்துகிறேன். யுத்தத்தின் பின்னான நிருவாகத்தில் பேராசைத்தனமான நவீன பழமைவாதம் மேலெழுந்துள்ளது. நிலையான நீடித்த சமாதானத்துக்கு நாங்கள் மாறுவதை இதுதான் தடை செய்கிறது.
கேள்வி: இதை நாங்கள் எப்படி நிவர்த்தி செய்யலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில்: இரண்டு மட்டங்களில் இதை நிவர்த்திப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்படலாம். முதலாவது யதார்த்தமே அதற்கான திருத்தத்தை செய்யும். ஜனாதிபதி ராஜபக்ஸ வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளதிலிருந்து நாம் சில சாதகங்களைக் காணலாம். அது இலகுவான ஒன்றாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் நாட்டிலும் மற்றும் அரசாங்கத்திற்குள்ளும் அந்த தீர்மானத்துக்கு எதிராக சக்திவாய்ந்த பல குரல்கள் எழுந்துள்ளன. அரசாங்க மற்றும் ஆளும் வட்டத்திற்குள் இந்த பிரச்சினை ஒரு பிரமாண்டமான அரசியல் மற்றும் சித்தாந்த யுத்தமாக இருக்கும். ஆனால் இந்த அறிவிப்பு பொருளாதார மற்றும் மூலோபாய யதார்த்தங்கள், அவற்றின் தாக்கத்தையும் மற்றும் முக்கிய சில விடயங்களுக்கான திருத்தத்தையும் செய்ய ஆரம்பித்திருப்பதற்கான ஒரு சமிக்ஞையே ஆகும். எனவே சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என்பதற்கு இது ஒரு பரிமாணம்.
மேலும் பல முக்கிய பரிமாணங்களில் திருத்தங்கள் இடம் பெறக்கூடும். ஏன் நவீன பழமைத்துவம் வெற்றிபெற இயலுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது ஏனென்றால் ஜனாதிபதி ராஜபக்ஸவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மிகவும் தாராண்மைவாத அல்லது முன்னேற்ற எண்ணம் கொண்ட நிருவாகங்களால் புலிகளை தோற்கடிக்க இயலவில்லை அல்லது விரும்பவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஸவைவிட அதிகம் மிதவாதமும், பன்மைத்துவமும் கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மற்றும் ஜனாதிபதி பிரேமதாஸ ஆகியோர்களது நிருவாகங்கள்கூட புலிகளை தோற்கடிப்பதில் தோல்வி கண்டிருந்தன. உண்மையில் அவர்களால் முழுமனதுடன் அதை செய்ய முடியவில்லை. அவர்களது தோல்வி அதிக பன்மைத்துவம் கொண்ட தாராண்மைவாதத்தையோ அல்லது முற்போக்கான முன்னேற்றங்களை செல்வாக்கற்றவை ஆக்கின. அத்தகைய இயல்புகள் ஸ்ரீலங்கா வாக்காளர்களுக்கு மிகவும் வலுவான அணுகுமுறைகளை தவிர வேறு தெரிவுகளை மேற்கொள்ள இடமளிக்கவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஸ மக்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு அதை நடைமுறைப்படுத்தினார். எனவே பன்மைத்துவம் கொண்ட அரசியல்வாதிகளிடையே ஸ்ரீலங்கா அரசியல் முனைவாக்கம் பெற்றதிலேயே பிரச்சினை தங்கியுள்ளது, அது ஒரு நல்ல விடயம்தான் ஆனால் போதுமானளவு தேசப்பற்று அங்கிருக்காதது ஒரு கெட்ட விடயம். பின்னர் மறுபுறத்தில் நல்ல விடயமான நாட்டுப்பற்றை கொண்டிருப்பவர்கள், குறுகிய இன - மத உணர்வுகளில் பற்றுடையவர்களாக இருந்தார்கள் அது ஒரு கெட்ட விடயம்.
ஸ்ரீலங்காவில் இன்று அரசியல் சந்தை போட்டியற்ற ஒன்றாக திகழ்கிறது, மற்றும் அது போட்டியற்றதாக இருப்பது ஏனென்றால் ஜனாதிபதி ராஜபக்ஸ ஜனநாயக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதால்தான் என்று சொல்லிவிட முடியாது. அது போட்டியற்றதாக இருப்பது ஏனென்றால் பிரதான ஜனநாயக எதிர்கட்சி, மிக நீண்ட காலமாகவே சரிவடைந்து போயுள்ளது.
அது எதனாலென்றால் அது பெருமளவில் வாக்காளர்களின் நம்பிக்கையையும் மற்றும் விசுவாசத்தையும் இழந்துவிட்டது என்பது மட்டுமல்ல அதன் சொந்த வாக்குத் தளத்தையும் அது இழந்துவிட்டது. எதிர்கட்சிக்குள் ஒரு ஆட்சிமாற்றம் நடைபெற்று பிரதான எதிர்கட்சியின் கீழ்நோக்கிய சரிவு நிறுத்தப்படாதவரை தற்போதைஆட்சியின் நடத்தைகளை ஜனநாய வழிக்கு மாற்றுவது அல்லது நாடு முழுவதுக்குமான ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினம். எனவே வாய்ப்புகள் சிதைவடையாமல் நிறுத்தவேண்டுமானால் ஸ்ரீலங்கா உடனடியாக செய்;யவேண்டியது என்று; நான் காணும் இரண்டாவது வகையான ஆழமான பரிமாணம் இதுதான்.
கேள்வி: அரசாங்கம் தொடர்ந்து சக்திவாய்ந்ததாக இருப்பதற்கு காரணம் பிரதான எதிர்கட்சி பலவீனமாக இருப்பதுதான் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
பதில்: ஜனநாயக வாய்ப்புகள் குறைவாக உள்ளன. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நெருக்கடியான ஒரு நிலமை, ராஜபக்ஸ நிருவாகம் மற்றும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளில் உள்ள நல்லவை கெட்டவைகளை சீர்தூக்கிப் பார்க்குமிடத்து, அவர் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது அவர் இப்போதும் ஒரு அதிர்வை உண்டாக்குவதுடன் இந்தக் கணத்தில் அவரை எதிர்க்கத்தக்க பிரதான போட்டியாளர் நிச்சயமாக வெறும் மரக்கட்டை போலத்தான் இருக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் பீர் பரீட்சை என்று ஒன்றுண்டு. ஸ்ரீலங்காவில் அதை தேனீர் பரீட்சை என்று அழைக்கலாம் என நான் நினைக்கிறேன். தற்பொழுது போட்டியிலிருக்கும் வேட்பாளர்கள் இருவரில் யாருடன் நீங்கள் ஒரு கோப்பை தேனீர் அருந்த விரும்புகிறீர்கள் என்பதுதான் பரீட்சை. அதற்கான பதில் மிகவும் வெளிப்படையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதில் குறிப்பாக வஞ்சனையானது என்னவென்றால் ஒருவேளை எதிர்கட்சியில் உள்ள அங்கத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்தக் கட்சியின் தலைவரைவிட ஜனாதிபதியுடன் தேனீர் அருந்துவதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். அது மாறாதவரைக்கும் எதுவுமே மாறப்போவதில்லை. ராஜபக்ஸ ஆட்சியை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு தூண்டக்கூடிய ஒரே விடயம் அது சிங்கள வாக்காளர் தொகுதிகளில் ஒரு தேர்தல் அச்சுறுத்தலை உணர்வது மட்டுமே. அப்போது விடயங்கள் நல்ல நிலைக்கு மாறுவதை உங்களால் காணமுடியும், மற்றும் ஜனாதிபதிகூட தனக்கு நெருக்மானவர்களிடம் சில விடயங்களை செய்யக்கூடாது, ஏனெனில் அவர்கள் ஆட்சியை இழந்துவிடலாம் என்று சொல்வதற்கு தகுந்த ஒரு காரணம் கிடைக்கும். தற்சமயம் அவர்களிடம் வழங்குவதற்கு அவரிடம் அப்படியான ஒரு காரணமோ அல்லது சமாதானமோ கிடையாது.
கேள்வி: ஜனாதிபதிக்கு சவால் விடத்தக்க சாத்தியமான மாற்றீடு யாராக இருக்கும்?
பதில்: ஒரு அரசியல் விஞ்ஞானி என்றவகையில் நான் ஆட்களை மதிப்பிடுகிறேன். அந்த புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது தற்போதைய தலைமையின் கீழுள்ள பிரதான ஜனநாயக எதிர்கட்சி ஒரு சக்திவாய்ந்த நீச்சல் வீரருடன் போட்டியிடும் ஒரு நீச்சல் வீரரை போலவே உள்ளது, அதேவேளை அது அதன் கணுக்காலில் ஒரு பெரிய இரும்பு பந்தை கட்டிக்கொண்டு அது நீச்சலடிக்கிறது.
மாகாணசபை தேர்தல்கள் இந்த வருட பிற்பகுதியில் நடப்பதற்கு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு மூன்று மாகாணங்கள் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வாய்ந்த இடங்களாக இருந்தன. அதை அவர்களால் எப்படி இழக்க முடிந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 17; கொந்தளிப்பான வருடங்கள் ஆட்சியிலிருந்ததின் பின்னர் 1994 தேர்தலில் ஐதேக அதன் வழியிலிருந்து தெளிவாக வெளியேற்றப்பட்டது. அதன் உயர்மட்ட தலைவர்கள் புலிகளினால் அழித்தொழிக்கப்பட்டார்கள். காமினி திசாநாயக்கா கொல்லப்பட்டதும் அவரது விதவை சிறிமா திசாநாயக்கா ஒரு ஐதேக அங்கத்தவராக இல்லாமலிருந்த போதும் வேட்பாளராக சேவையில் திணிக்கப்பட்டார். ஐதேக வுக்கு இது ஒரு மிக மோசமான காலம் என்று ஒருவர் நினைத்திருக்கலாம். அவர் 43 சதவீத வாக்குகளைப் பெற்றார். அதன்பின் 19 வருடங்கள் ஸ்ரீ.ல.சு.க ஆட்சி நடத்தியதன் பின்னரும் இன்று ஐதேகவுக்கு அந்த 43 சதவீதம்கூட எட்டமுடியாத உயரத்தில் இருப்பதாகத்தான் தெரிகிறது.
1994ல் கட்சி அங்கத்தவரல்லாத ஒருவர் பெற்ற அந்த 43 சதவீதத்தை இன்று அவர்கள் அடைவது வெறும் கனவு மட்டுமே. அவர்கள் அதற்கு நெருக்கமாக வந்தது 2010ல் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா நிறுத்தப்பட்டபோது மட்டுமே. ஐதேக வின் அடித்தளமாக இருந்த வாக்குகள் இன்று எட்டாக்கனியாக மாறிவிட்டன. இது மகிந்த ராஜபக்ஸ யுத்தத்தில் வென்ற காரணத்தினால்தான் திரும்பவும் தெரிவு செய்யப்பட்டார் என்கிற ஒரு வாதத்துடன் பொருந்தாது, இது தவறான வாதம் ஏனெனில் தற்போதைய ஐதேக தலைவர் சந்திரிகா குமாரதுங்கவிடமும் தோற்றிருக்கிறார். மற்றும் அவர் சந்திரிகாவிடம் தோற்றபோது சந்திரிகா குமாரதுங்க யுத்தம் எதிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை. இதில் எதாவது தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்றால் அது அவர் வெறுமே தோற்றுப் போவதுடன் கட்சியையும் தன்னுடன் கீழே இழுத்துச் செல்வதுதான். முதலில் காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியும் இரும்பு பந்தும் அகற்றப்பட வேண்டும். ராஜபக்ஸ ஆட்சியிலிருப்பது வெறும் ஏழெட்டு வருடங்கள் மாத்திரமே. உண்மையான நடவடிக்கை இடம்பெறுவது ஐதேக வில் மட்டுமே, ஏனெனில் இங்கு ஒரு தலைவர் 1994 முதல் பதவியில் இருக்கிறார். ஸ்ரீலங்காவுக்கு ஒரு அராபிய வசந்தம் தேவை என்றால் அதை நாங்கள் ஐதேக வில்தான் செய்துபார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசியலின் மத்திய தளப் பகுதி வெற்றிடமாக இருப்பதுதான் பிரச்சினை. ஸ்ரீ.ல.சு.க அதை பிடித்திருப்பதுபோல பாவனை செய்கிறது. ஆனால் அதனால் நீண்டகாலம் மத்திய தளத்தை கைப்பற்றி வைத்திருக்க முடியாது. ஸ்ரீலங்கா அரசியலில் மத்திய தளம் நிரப்பப்படவே இல்லை. இங்குதான் தீவிரமான அரசியல் இலக்கு வைக்கப்படுகிறது. புலிகளுடன் சமாதானம் செய்துகொண்ட ஒருவராக மக்களின் மனங்களில் அடையாளம் காணப்படும் ஒருவரை எதிர்கட்சி தலைவராக வைத்திருக்க முடியாது. புலிகள் ஒரு மங்கிப்போன நினைவாக இருக்கலாம் ஒருவேளை இது அத்தனை முக்கியமான ஒரு காரணியாக இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் பிரபாகரனையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யையும் அடையாள சின்னமாக உயர்த்திப் பிடித்து கிளர்ச்சி செய்யும் தமிழ் நாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும், வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள், அவர்கள் இந்த அச்சுறுத்தலை எளிதாக நினைவில் கொள்வார்கள். எனினும் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து வருகின்றன, இறுதியாக அவர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது, அவர்கள் ஸ்ரீலங்காவாசிகள் அதன் குடிமக்கள் என்ற விதத்தில் மட்டும் அல்லாது சிங்களவர்கள் என்கிற விதத்திலும் வாக்களிப்பார்கள். தங்களுக்கு நாணத்தக்க இருண்ட கடந்த காலத்தை நினைவூட்டும் ஒருவருக்கு அவர்கள் நிச்சயமாக வாக்களிக்கப் போவதில்லை.
(தொடரும்)
இலங்கையின் அரசியல் சந்தை போட்டியற்ற ஒன்றாகவே காணப்படுகிறது, எனினும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே மறைமுகமான எதிர்பார்ப்பாகும்.அரசாங்கம் தனது அணி சார்ந்த அரசியல் வாதிகளையும் அமைச்சர்களையும் ,ஏனைய அரசியல் கட்சிகளையும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் அடாவடித்தனமும் தாம் விரும்பாதவற்றை அல்லது விரும்பாதவர்களை இரும்புக்கரம் கொண்டுஅடக்கும் அழிச்சாட்டியந்தான் இதற்குக்காரணம் என்று கூறுவதை விட ,நாட்டின் பிரதான ஜனநாயக எதிர்க்கட்சி நீண்ட காலமாக பலகீனமாகி ,சரிவடைந்துள்ளதே இதற்கு பிரதான காரணமாகக்கொள்ள முடியும். நாட்டு மக்களின் மதிப்பையும் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கும் ஒரு பிரதான நிகழ்கால எதிர்க்கட்சியால் ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியுமென்பது,மிகக்கடினமான ஒரு விடையமாக கருதப்படுகின்றது.கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும் என்பது போல்,பலமிக்க ஆட்சியொன்றினை மாற்றியமைக்க ,அல்லது அதிலே காணப்படும் குறைபடுகளைக்கழைந்தெறிய ,மக்கள் மன்றமாகிய பறாளுமன்றத்தை,அதன் இயல்புகளை ஆக்கபூர்வமானதாக பரிணமிக்கச்செய்வதற்கு எதிர்க்கட்சியின் ஆளுமைப்பலம் இன்றியமையாததாகும்.இன்று இலங்கையின்பிரதான எதிர்க்கட்சி ,ஆளுமையற்ற தலைமைத்துவத்தினால் நலிவடைந்துள்ளது,நோயாளியான ,வலது குறைந்த நிலையில் காணப்படும் இந்த எதிக்கட்சி தொடர்ந்து இந்நிலயிலேயே இருந்தால் இலங்கையில் ஆட்சி மாற்றமும் ,ஜனநாயகமும் எட்டாக்கனியாகி விடுவதில் வியாப்பெதுவுமில்லை.
ReplyDeleteidaivida sinna eluthaha erunthal potahakkannadiyai vatchu parkalam.
ReplyDelete