Header Ads



முஸ்லிம் அறிஞரும், சமூகவியலாளருமான அஸ்கர் அலி வபாத்தானார்


(Tho)

முஸ்லிம் அறிஞரும், சமூகவியலாளருமான அஸ்கர் அலி எஞ்சீனியர்(வயது 73) மரணமடைந்தார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அஸ்கர் அலி, மும்பை சாந்தாக்ரூஸில் உள்ள வீட்டில் வைத்து மரணமடைந்தார்.

1939-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஸாலும்பரில் பிறந்தார்.உஜ்ஜயினில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் எஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றார். இருபது ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் எஞ்சீனியராக பணியாற்றினார்.1972-ஆம் ஆண்டு அரசு பணியில் இருந்து தாமாகவே ஓய்வுப் பெற்று சமூக துறையில் கவனம் செலுத்தினார்.1980-ஆம் ஆண்டு முதல் த இஸ்லாமிக் பெர்ஸ்பெக்டிவ் என்ற பத்திரிகையின் ஆசிரியரானார்.

தாவூதி போரா முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்த அஸ்கர் அலி, அப்பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் அவருடையை சீர்திருத்தத்திற்கான அழைப்பைத் தொடர்ந்து தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டார். போரா முஸ்லிமாக பிறந்த அஸ்கர் அலியின் கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.

80 களில் இஸ்லாத்தைக் குறித்தும், இந்தியாவில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரங்களைக் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். தேசிய மதநல்லிணக்க விருது உட்பட ஏராளமான விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன. மூன்று ஹானரரி பி.ஹெச்.டி பட்டங்களையும் பெற்றுள்ளார். பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு செண்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் சொசைட்டி அண்டு செக்குரலிஸம் என்ற நிறுவனத்தை துவக்கி அதன் தலைவராக இருந்தார்.

52 நூல்களை எழுதியுள்ளார்.பல்வேறு பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.தென்கிழக்கு ஆசியாவில் இன தாக்குதல்,வகுப்புவாதம் ஆகியவற்றிற்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகள் சர்வதேச அளவில் பிரபலமாக்கின.சர்வதேச நாடுகளில் நடந்த மாநாடுகளிலும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இஸ்லாம், சமாதானம், மனித உரிமை ஆகிய தலைப்புகளில் அவருடைய உரைகள் அமைந்தன.

எ லிவிங் ஃபெய்த், மை க்வஸ் ஃபார் பீஸ், ஹார்மணி அண்ட் சோசியல் சேஞ்ச் போன்ற நூல்கள் முக்கியமானவை.இந்தியன் ஜெர்னல் ஆஃப் செக்குலரிஸம், இஸ்லாம் அண்ட்  மாடர்ன் ஏஜ், செக்குலர் ஃபெர்ஸ்பெக்டிவ் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் அஸ்கர் அலி எஞ்சீனியர்.

No comments

Powered by Blogger.