ஆர்ஜன்டீனாவில் அதிசயம் - மக்கள் திரண்டுவந்து பார்வை (படங்கள்)
(TN) ஆர்ஜன்டீனாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீரில் மூழ்கியிருந்த முன்னாள் சுற்றுலா தலமான எபிகியுன் நகர் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
எனினும் இந்த நகர் முழுமையாக அழிவடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த வாகனங்கள், தளபாடங்கள், இடிபாட்டு குவியலாகி இருக்கும் வீடுகள் மற்றும் ஹோட்டல்களை பார்வையிட மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். ஏரிக்கரை நகரான எபிகியுனில் சுமார் 1,500 க்கும் அதிகமானோர் வாழ்ந்துவந்ததோடு ஒவ்வொறு பருவகாலத்திலும் 20,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
எனினும் 1985 ஆண்டு கட்டுக்கடங்காத மழையால் இந்த பகுதியை பாரிய வெள்ளம் சூழ்ந்ததோடு அது நகரையே மூழ்கடிக்கச் செய்தது.
இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் ஒரு சில மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டனர். 33 அடிக்கு உப்பு நீரால் நகரம் முழுமையாக மூழ்கியது.
இந்நிலையில் கால் நூற்றாண்டுகள் கழித்து இங்கு தண்ணீர் வற்ற ஆரம்பித்துள்ளது. இந்த பகுதி மீண்டும் சுற்றுலா தலமாக மாறும் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Post a Comment