சவூதி அரேபியாவில் பரவும் மர்ம காய்ச்சல்
சவூதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 'சார்ஸ்' போன்ற கரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் சவூதியில் உள்ள ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குளிர் மற்றும் காய்ச்சல் தான் இந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறி என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
அல்-ஆஷாவில் உள்ள மன்னர் ப்ஹாத் ஆஸ்பத்திரியில் இந்த அறிகுறிகளுடன் வந்த 13 நோயாளிகளை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த மர்ம நோய்க்கு ஆளான 24 பேரில் 15 பேர் பலியாகியுள்ளதாக சவூதி அரேபியாவின் சுகாதார மந்திரி அப்துல்லா அல்-ராபியா தெரிவித்தார்.
Post a Comment