Header Ads



இலங்கையின் முதலாவது அல் ஹாபிழ் காலமானார்


(நாகூர் ழரீஃப்)

இன்று இலங்கையில் பல அறபுக் கலாபீடங்களும் அல் குர்ஆன் மனன பீடங்களும் நாடலாவிய ரீதியில் இயங்குகின்றன. எனினும் ஆரம்பகாலங்களில் இலங்கையில் இத்தகைய வசதிகள் இருக்கவில்லை. எனவே, இஸ்லாமிய கல்வி பயில்வதற்காகவும், அல் குர்ஆனை மனனமிடுவதற்காகவும் அயல் நாடான இந்தியாவையே நாடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அக்கால மாணவர்களுக்கிருந்தது.

மிக நீண்ட காலங்கள் அங்கு தங்கியிருந்து அம்மாணவர்கள் கல்வி பெற்றனர். அவர்களுள் அல் குர்ஆனை மனனமிடுவதற்காக வேண்டி இலங்கையில் இருந்து முதன் முதலில் இந்தியாவிற்குச் சென்றவரும், முதன் முதலாக அல் குர்ஆனை மனனமிட்டு அல் ஹாஃபிழ் பட்டம் பெற்றவரும் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட அல் ஹாஜ், அல் ஹாஃபிழ் எம்.ஏ. ஆதம் லெப்பை (புள்ளி ஹாஃபிஸ்) அவர்கள்களாவர். 

அன்னார், 11.05.2013 சனிக்கிழமை அன்று காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

அன்றைய தினமும் தஹஜ்ஜுத் போன்ற இரவு வணக்கங்களில் நீண்ட நேரங்கள் ஈடுபட்டதுடன் ஸுப்ஹுத் தொழுகையையும் வழமை போன்று நிறைவேற்றியதுடன் அல் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த வேளையிலேயே அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும்.

அவர்கள் இந்தியாவுக்குச் சென்ற போது, அந்நாட்டின் காலநிலை அவர்களுக்கு ஒத்துப் போகவில்லை. அவ்களது முகங்களில் உஷ்ணப் பருக்கள் காணப்பட்டன. ஆதனால் மக்கள் அவர்களை புள்ளி ஹாஃபிஸ் என்று அன்போடு அழைத்தனர்.

தாறுல் ஹஸனாத் எனும் பகுதி நேர அல் குர்ஆன் மனனபீடத்தினை தனது இறுதி மூச்சு வரை கண்ணாகக் கொண்டு அயராது உழைத்தார்கள்.

அன்னாரின் அயராத அல் குர்ஆனியப் பணியினைப் பாராட்டி 'நூருல் குர்ஆன்' எனும் சிறப்பபப் பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களது முயற்சியின் பயனாக இலங்கையில் பல ஹாஃபிழ்கள் உருவாகியுள்ளனர்.

அன்னாரின் ஜனாஸா சனிக்கிழமை அன்றே சம்மாந்துறை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸாவில் ஆலிம்கள், ஹாஃபிழ்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அல்லாஹ் அவர்களது அமல்களையும் சேவைகளையும் அங்கீகரித்து சுவன பாக்கியத்தை அவர்களுக்கு அருள்வானாக!



5 comments:

  1. Inna lillahi wanna ilahi raajioon may allah offer him al jannath

    ReplyDelete
  2. Allah may give paradise...............

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வயின்னா இலைகி றாஜிஊன். இந்த தகவலைக்கொடுத்த சகோதரருக்கு நன்றி.... அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸை வழங்க பிராத்திப்பதோடு அவரை இழந்து நிற்கும் அன்னாரது குடும்பத்தார் உறவினர்கள், ஊரார் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் இறைவன் பொறுமையைக்கொடுக்க வேண்டும்... இவன் அப்துல் காதர் (ஹாபிழ்). நிந்தவூர்

    ReplyDelete
  4. இன்னலிலாஹி வஇன்ன இலைஹி ராஜியுன், அன்னாரை அல்லாஹ் பொருந்திகொள்வானாக

    ReplyDelete

Powered by Blogger.