இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கையேடு வெளியீடு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FREE TRADE AGREEMENT) தொடர்பான முழுமையான தகவல் அடங்கிய கையேடு ஒன்றை இலங்கை கொள்கை வகுப்பு கற்கை நிலையம் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் என்பன இணைந்து தயாரித்துள்ளது.
இந்த கையேடு தயாரிக்கப்பட்டதன் மூலம்இஇலங்கை மற்றும் இந்திய வர்த்தக துறையாளர்கள் தமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்யப்பட்டு இற்றைக்கு 13 வருடங்கள் கழிந்த நிலையில் ஆவணப்படுத்தப்பட்ட தகவல் கையேடாக இது வெளிவந்துள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் இலங்கை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் தொடர்பிலான தகவல்கள், வரி மற்றும் வரி விதிக்கப்படாமை தொடர்பிலான விபரங்களும் இந்த கையேட்டில் காணப்படுகின்றது.
இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்படிக்கையின் தன்மைஇஇதனது வரலாறு இஇந்திய நெசவு மற்றும் வர்த்கதஇவாணிபஇஅமைச்சர் ஆனந் சர்மா இலங்கைக்கான வருகையின் பலாபலன்கள் மற்றும் இலங்கை கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோருடன் இடம் பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனது வெளியீட்டு வைபவம் நேற்று மாலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம் பெற்றது.இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காண்த் முதலாவது பிரதியினை கைத்தொழில் இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கையளித்தார்.இந்த நிகழ்வில் கொள்கை வகுப்பு கற்கை நிலையத்திற்கான நிறைவேற்று பணிப்பாளர் சமன் கெலேகம, டாக்டர் ஆணந்த குமாரசுவாமி.கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன, இந்திய உயர் ஸ்தானிகராலய கவுன்சிலர் மனிஷ் உட்பட துறை சார்ந்தவர்களும் இதன் போது பிரசண்ணமாகியிருந்தனர்.
Post a Comment