சம்மாந்துறை கல்வி அதிகாரிகளே..! இது உங்களின் பார்வைக்கு..!! (படங்கள்)
(கே.எம். அன்சார்)
சம்மாந்துறையில் உள்ள ஆரம்ப நிலைப் பாடசாலைகளில் ஒன்றுதான் சம்மாந்துறை அல்-ஹம்றா பாடசாலை. இந்தப் பாடசாலை பல அத்தியாவசிய அபிவிருத்திகளையும், தேவைகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது ஆனால் இது விடயத்தில் இன்னும் பாராமுகமாகத்தான் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
இந்தப் பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கதிரை, மேசைகள் போன்ற தளபாட வசதி அற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்களது அன்றாட கற்றல் கற்பித்தல் நடிவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது. அதே போல் இந்தப் பாடசாலையின் கட்டிடங்கள் பெயின்டிங் செய்யப்படாமல் ஏதோ பாழ் அடைந்த மண்டபம் போன்று காணப்படுகிறது, மண்டபத்தின் தரையானது சீமெந்துகள் கிலரிவிடப்பட்டு, குண்றும் குழியுமாகக் காணப்படுகிறது.
சிறந்த கற்றலுக்கு பௌதீக வளங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் அதில் குறைபாடுகள் நிலவும் பட்சத்தில் கல்வியிலும் குறைபாடுகள் வருவது தவிர்க்க முடியாததாகின்றது. நாம் மாணவர்களுக்கு சிறந்த பௌதீக வழங்களை பெற்றுக் கொடுத்தால் அவர்களால் கற்றல் நடிவடிக்கைகளில் சிறப்பாக விளங்க முடியும் அல்லவா.
மாணவர்கள்தான் நமது எதிர்கால சமூதாயம், சமூதாயம் என்று தொண்டை கிழிய கிழிய பேசும் அனைவரும் இந்த மாணவர்களது, இந்த எதிர்கால சமூதாயத்தினரது கற்றல் நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமல்லவா..???
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் இந்தப் பாடசாலையைப் பார்வையிட்டு, இந்தப் பாடசாலையின் குறைகள் பற்றி சம்பந்தப்பட்ட அரச தரப்பினருக்கு எடுத்துக் கூற வேண்டும் அதன் மூலமாக இந்தப் பாடசாலை தேற வேண்டும்.
Dear Brother,
ReplyDeleteLet this be observed both by the
1. Education officers (related) as well as
2. The Old students/ Parents / Organisations of this school area.
Certain issues can also be solved by the 2nd group of people mentioned above. They can collect help from wealthy and repair the floor and chairs and even paint the building.
We Sri Lankan look everything to be done from authority and not ready to spend small amount of money for a place where we benefited in gaining our education. But now we are rich, personality in the society.. we only take care our family...
It is both the officer in charge and our self should work together.