சர்வதேச குடும்ப தினம்
இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. "மேம்பட்ட சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமுறையினரிடையே ஒற்றுமை' என்பது, இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உலகளவில் சொந்த இருப்பிடத்தை விட்டு, உள்நாட்டுக்குள் அல்ல, வெளிநாடுகளில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களை சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.
குடும்பமே முதல் வேலை
ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. தனிக்குடும்ப வாழ்க்கை, விவாகரத்துகள், தாய், தந்தை இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தடுப்பதற்கு குடும்பங்களின் ஓற்றுமை அவசியம்.
Post a Comment