குழந்தைகளை நிர்க்கதியாக்கி வெளிநாடு செல்லும் பெண்கள் குறித்து தகவல்களை வழங்குக
குழந்தைகளை நிர்க்கதியாக்கி தொழிலுக்காக வெளிநாடு செல்லத் தயாராகும் தாய்மார் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறான தாய்மார் வெளிநாடு செல்வதனை தற்காலிகமாக தடைசெய்ய முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.
மனைவிமார் இரகசியமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாக ஒரு சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகளைப் பராமரிக்க முடியாதுள்ள காரணத்தால் வெளிநாடு சென்றுள்ள தமது மனைவியரை மீண்டும் நாட்டிற்கு திருப்பியழைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். nf
Post a Comment