Header Ads



பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்திரத்தின தேரர் தீயில் சங்கமம் (படம்)


கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால், தீக்குளித்து மரணமான போவத்த இந்தரத்தன தேரரின் இறுதி கிரியைகள் இன்று 28-05-2013 மாலை பொரனுவ மைதானத்தில் இடம் பெற்றது.

பௌத்த மதகுருமார் உட்பட ஏராளமானவர்கள் இறுதி கிரியைகளில் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது, காவத்தை பிரதேசத்தில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுதவிர, நகரத்தின் மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டிருந்தன.

இதனிடையே, கஹவத்த, ரத்னபுர ஆகிய நகரங்களில் மஞ்சள் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தது.

மிருக வதைக்கு எதிராக சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என கோரியே போவத்த இந்தரத்தன தேரர் தீக்குளித்து மரணமானமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.