இஸ்ரேலின் அத்துமீறலைக் கண்டிக்கும் அறபு லீக்
(நாகூர் ழரீஃப்)
முஸ்லிம்களின் மூன்று புனிதஸ்தளங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் சென்ற வாரம் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலியப் படையினர் அப்புனித மஸ்ஜிதின் தலைமை முஃப்தி அஷ் ஷைக் முஹம்மத் ஹுஸைன் அவர்களைக் கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து அறபு லீக்கின் உயர்மட்டத் தூதுக் குழுவின் அவசரக் கூட்டமொன்று கெய்ரோவில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் தலைமை முஃப்தி அவர்களின் கைது மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் அத்துமிறி நுழைந்தமை ஆகியவற்றை வண்மையாகக் கணடடிப்பதுடன், இவற்றிற்கு சர்வதேச சமூகம் பதில் கூறவேண்டிய கட்டாயம் உணரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பூமியில் அமைந்துள்ள மேற்படி புனிதம் நிறைந்த மஸ்ஜிதினைப் பாதுகாக்கும் பொறுப்பினை பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம், யுனஸ்க்கோ போன்றவற்றுடன், சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மேற்படி அவசர அமர்வின் போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் சர்வதேச சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறி, கிழக்கு ஜெரூஸலத்தில் இஸ்ரேலின் செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வத்திக்கானின் உயர் சபையையும் அரபு லீக் வேண்டிக் கொள்ளவுள்ளதாகவும் அவற்றிற்குத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment