Header Ads



கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டம் (படங்கள்)



(இப்னு செய்யத்)

ஓன்றிணைந்த ஆசிரியர் தொழிற் சங்கங்கின் அழைப்பின பேரில்; 14.05.2013 செவ்வாய்க் கிழமை கல்முனை கல்வி வலயத்தில் சுகவீன லீவுப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டார்கள்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஜனநாயக ஆசரியர் சங்கம் ஆகியன இணைந்து சுகவீன லீவுப் போராட்டத்தில் ஈடுபடுமாறு கல்முனை வலய ஆசிரியர்களை கேட்டுக் கொண்டன.

கல்முனை வலயத்தில் அநீதியான முறையில் மேற் கொண்ட ஆசிரியர் இடமாற்றத்தை இரத்துச் செய், வருட மத்தி இடமாற்றங்கள் அனைத்தையும் இரத்துச் செய், இடமாற்ற சபையின் அங்கிகாரமின்றி மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்களை இரத்துச் செய், தேசிய இடமாற்றக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்து, கல்முனை வலய ஆசிரியர் சமமின்மையை முடியுமான வரை நீக்கு, உண்மையான ஆசிரியர் கணக்கெடுப்பை முறையாக நடாத்து, அரசியல்வாதிகளின் தலையீட்டை அனுமதிக்காதே, ஆசிரியர்களை சுதந்திரமாக கற்பிக்கவிடு, ஆசிரியர் விடயங்களில் அராஜகத்தை நிறுத்து, தற்காலிக இடமாற்ற வகுதியை முற்றாக நீக்கி, நிரந்தரமாக்கு, புதிய ஆசிரியர் நியமனத்தை நீதியாக வழங்கு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே மேற்படி சுகவீன லீவுப் போராட்டம் ஆசிரியர்களினால் மெற்கொள்ளப்பட்டது.

இதே வேளை, ஆசிரியர்கள் என்ன பகடைக்காய்களா? கோத்தடிமைகளா? அதிகாரிகளே! அதிபர், ஆசிரியர்களை அடக்க நினைக்காதீர்கள், மாகாண, வலய இடமாற்ற சபைகள் எதற்காக? இடமாற்ற அதிகாரத்தை செயலாளர் கையில் எடுத்ததேன்? மேலதிக ஆசிரியர் இடமாற்றம் கல்முனைக்கு மட்டும்தானா? ஆகிய கோசங்கள் ஆசிரியர்களின் சுகவீனப் போராட்டத்தினை முன்னிட்டு ஒன்றிணைந்த ஆசிரியர் தொழிற் சங்கங்களினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளன.

கல்முனை கல்வி வலயத்தில் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுகவீனப் போராட்டம் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகயில் பூரண வெற்றியை அளித்திருந்நதன. ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூமளிக்காத காரணத்தால் தமிழ் பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதே வேளை, இங்க மாணவர்களின் வரவும் குறைவாகவே இருந்தன். இம்மாணவர்கள் ஆசிரியர்கள் வருகை தராத காரணத்தால் இன்று காலையிலேயே வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

முஸ்லிம் பிரதேசங்களில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கின. முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு வழமையை விடவும் அதிகமாக இருந்ததாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.