மகாசேன் புயல் அரசியலாகிறது
(Pp) வங்கக் கடலில் உருவான புயலுக்கு, அனுராதபுரத்தை ஆண்ட சிங்கள மன்னான மகாசேனனின் பெரைச் சூட்டியது எப்படி என்பது தொடர்பாக, உள்ளக விசாரணை நடத்தும்படி, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு சிறிலங்காவின் வரலாற்று நீரியல் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான தேசிய சபை அழுத்தம் கொடுத்துள்ளது.
புயலுக்கு அனுராதபுர அரசன் மகாசேனனின் பெயரைச் சூட்டப்பட்டதால், அவரது புகழ் கெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தத் தவறினால், சிறிலங்கா வணிமண்டலவியல் திணைக்களம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சிறிலங்காவின் வரலாற்று நீரியல் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான தேசிய சபையின் செயலர் நிமல் வீரதுங்க, தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தும்படி, கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் சிறிலங்காவின் வரலாற்று நீரியல் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான தேசிய சபை முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் நடவடிக்கை மற்றும் நிர்வாக பணிப்பாளர் காரியவசம், தாம் ஏற்கனவே புயலுக்கு மகாசேனனின் பெயரைப் பயனபடுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வேறு சில நாடுகளும் அரசர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பெயர்களை புயலுக்கு சூட்டியுள்ளன.
சில நாடுகள் ஆண்கள் மற்றும் பெண்களின் பெயர்களைச் சூட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment