Header Ads



பௌத்த தர்மத்திற்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

பௌத்த தர்மத்திற்கு அமைவான முறையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திரரட்ன தேரரின் மறைவை பலர் இழிவுபடுத்துவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருகவதையினைக் கண்டித்து இந்திரரட்ன தேரர் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது.

எனவே தொடர்ந்தும் மிருகவதையினை மேற்கொள்ள முடியாது மிருக வதை மற்றும் மதமாற்றத்திற்கு எதிராக நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மத தர்மத்திற்கு அமைவான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீக்குளித்தவர் தன்னை ஒரு பிக்குவாக வெளியில் காட்டிக் கொண்டு வழிபாட்டுத்தலங்கள் உடைப்பு, மதத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தவர் என கொழும்பில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  அத்துடன் இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் இவர் வேறொருவரினால் தீ மூட்டி எரிக்கப்பட்டதாகவும் மேலும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கும் அது சம்மந்தமாகப்பேசுவதற்கும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் மேதைகளும் அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களும் இருக்கையில், பயங்கரவாதியும் குழப்பவாதியுமான அத்தே கலகொட ஞானசாரவுக்கு என்ன உரிமையுள்ளது நீ பெளத்தர்களால் அனுமதிக்கப்படாத பொதுபலசெனவாகிய பயங்கரவாதக்குழுவை வைத்திருக்கின்றாய் நேரத்திற்கு நேரம் புத்தி சுயாதினமில்லாதவன் பேசுவதைவிட மோசமான முறையில் பேசுகின்றாய் உனக்கு இப்படி பேசுவதற்கு நீ அணிந்திருக்கும் காவி உடை நல்ல பாதுகாப்பு தருகின்றது, தற்போது இதுதான் பெளதமதம் என்றளவுக்கு மிகவும் அசிங்கமானவைகளை அரங்கேற்றி வருவதால் எமக்கொன்றும் குறையப்போவதில்லை உண்மையான முறையில் பெளத்தமதத்தைப்படித்த தேரர்களும் பெளத்த தலைவர்களுமே இதுபோன்ற தெருக்கூத்தாடிகளுக்கு பதில் தரவேண்டும் உமது பெயரைக்காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

    கலகொட நீ இப்படி பேசுவதற்கு உனக்கு பின்னால் இருந்து தைரியத்தை யாருடா தருவது எங்களுக்கு நன்றாகத்தெரியும். தற்போது உனக்கு தைரியத்தையும் உதவியையும் தருகின்றானே அந்த மாங்காய் மடையன் நாள் உனக்கு ஆப்பு வைக்கும் போது கண்டிப்பாக நாங்கள் உனக்கு ஞாபகமூட்டுகின்றோம் பொறுத்திரு கொஞ்சம்...

    ReplyDelete
  2. உங்களுக்கு அழிவு மிகவும் விரைவில் வந்துவிட்டது. இன்ஸா அல்லாஹ், முஸ்லிம்களின் மனதை நோகடித்தவண்ணமுள்ளிர்கள் இன்னும் முஸ்லிம்கள் பொறுமையாகத்தான் இருக்கின்றோம் மற்றவர்களைப்போலவும் மற்ற நாட்டவர்களைப்போலவும் நாங்க எடுத்ததெற்கெல்லாம் கோபப்படவில்லை உம்மைப்போல அனாகரிகமாக நடக்கவில்லை நீங்கள் தற்போது முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாட்டின் மூலம் படைத்த இறைவனையே எதிர்த்தவண்ணம் செயற்பட்ட்டுக்கொண்டிருக்கின்றிர்கள், எங்களால் முடிந்தது எங்களைப்படைத்தவனிடம் கையேந்தி நிற்பது இன்ஸா அல்லாஹ் எம்மை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டான். இறைவனால் படைக்கப்பட்ட உனக்கு இவ்வளவு இருக்குமானால் உன்னையும் என்னையும் படைத்தவனுக்கு எவ்வளவு இருக்கவேண்டும். பொறுத்திருந்து பார்கலாம். உங்களனைவரின் ஆட்டத்தையும்...

    ReplyDelete
  3. இந்த முண்டம் கத்தித் தொலைக்கட்டும். இவண்ட வாப்பா உருவாக்கின நாடா இது? எமது மாடு எமது கத்தி அறுப்பதும், அறுக்காததும் எமது இஷ்டம். இவன் சோறு திண்ணுவதை நிறுத்திவிட்டு வைக்கோலும், பிண்ணாக்கும் திண்டால் தான் அடங்குவான். மனிதன் திண்ணுவதை இவன் திண்பது தான் இந்தளவுக்குப் பிரச்சினை.

    ReplyDelete

Powered by Blogger.