குவைத்தில் வெளிநாட்டவருக்கு காலை நேர சிகிச்சைக்கு தடை
(தினமலர்)
வளைகுடா நாடான குவைத்தில் உள்ள மருத்துவமனைகளில், வெளிநாட்டவருக்கு காலை நேரத்தில் சிகிச்சையளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில், வெளிநாட்டினர், 26 லட்சம் பேர் உள்ளனர். உள்ளூர் மக்களின் எண்ணிக்கை, 12 லட்சம் மட்டுமே. உள்ளூர் மக்களுக்கு, பொது மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குவைத்தின் மேற்குபகுதி யில் உள்ள, ஜாரா நகர மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிவதாக, அந்நாட்டு பார்லிமென்ட்டில் புகார் கூறப்பட்டது. இதை கேட்ட சுகாதாரத் துறை அமைச்சர் முகமது அல் ஹைபி, ""உள்ளூர் மக்களுக்கு மட்டுமே, காலை நேரத்தில் சிகிச்சையளிக்க வேண்டும். வெளிநாட்டு மக்களுக்கு, மாலை நேரத்தில் மட்டும் சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டுள்ளார்.
ஆறு மாதத்துக்கு, இத்திட்டம் பரிசோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்டு, நல்ல பலன் கிடைத்தால், அனைத்து மருத்துவமனைகளிலும், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. "குவைத் அரசின் இந்த திட்டம், இன ரீதியாக, மக்களை பாகுபடுத்துகிறது' என, எதிர்கட்சியினரும், தொண்டு நிறுவனத்தினரும் கன்டனம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment