Header Ads



ஆஸாத் சாலியின் அடிப்படை மனித உரிமை மீறல் நாளை ஒத்திவைப்பு


கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த மனுவை பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்கள் குழுவினர் இன்று வியாழக்கிழமை ஆராய்ந்தபோது நாளை விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினாலேயே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி மத்துரட்ட, உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் லசந்த ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சி.ஜே.வெலியமுன, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஹிஜாஜ் ஹிஸ்புல்லா, நிரன் அன்கேட்டல் மற்றும் சேனுர அபேவர்தன ஆகியோர் அஸாத் சாலி சார்பாகவும் அரச சட்டத்தரணி சனக்க விஜேசிங்க சட்டமா அதிபர் சார்பகவும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட அசாத் சாலியை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். tm

No comments

Powered by Blogger.