துபாயில் வெசாக் கொண்டாட்டம் (படங்கள்)
துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் கலாச்சார நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை ( 2013.05.10 ) துபாயில் உள்ள லத்திபா வைத்தியசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .
துபாய் வாழ் இலங்கையர்கள் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர் பாடசாலையில் பயிலும் இலங்கை பௌத்த மத சிருவர்களினால் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் , இசை நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
துபாய்க்கு உத்தியோக பூர்வ விடயமாக வருகைதந்து இருந்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் M .L .A .M ஹிஸ்புல்லாஹ் மற்றும் துபாயில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் கொண்டால் ஜெனரல் M.M. அப்துல் ரஹீம் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
பெரும் பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் ஒழுங்கு செய்த இன் நிகழ்ச்சியில் முஸ்லிம்களான பிரதி அமைச்சரும் , கொஞ்சல் ஜெனரலும் கலந்து கொண்டமைக்கு ஏற்பாட்டாளர்கள் தமது பாராட்டுக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர்
Hisbullavukku ithu thevaithaana
ReplyDeleteஹிஸ்புல்லாவுக்கு இது தேவைதானா
எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் வாழவேண்டியதை உலகிலே வாழ்வோம் என முடிவு செய்துவிட்டார்கள் போலும். மார்க்கத்தை ஒரு மூளையில் போட்டுவிட்டு சமூக சேவை என்ற தொணியில் ஸவுதியிலும், டுபாயிலும் பணத்தை அள்ளுவதற்காக எதை எதையோ செய்கிறார்கள். பொட்டு வைக்க வேண்டுமா பொட்டு வைப்பார்கள். குத்து விளக்கேற்ற வேண்டுமா ஏற்றுவார்கள். எந்த ஷிர்க்கையும் பற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்கள். எவ்வளவு தான் பணப் பேராசையில் துள்ளிக் குதித்தாலும் உண்பது ஒரு பிலேட் சோறு மட்டுமே, உடுப்பது ஒரு ஸெட் உடை மட்டுமே என்பதை மறந்துவிட்டார்கள். மறுமையில் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்ற சிந்தனையோ, நான் ஈமானோடு மரணிக்க இவைகள் தடையாக உள்ளதே என்ற சிந்தனை இவர்களிடம் இல்லாமலிருப்பது வேதனையே.
ReplyDelete