Header Ads



விடைபெறும் இலங்கைக்கான இந்திய தூதுவருக்கு அமைச்சர் றிசாத் பிரியாவிடை


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையில் தமது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியாவின் ஆசிய  பிராந்தியத்துக்கான செயலாளராக நியமனம் பெற்றுச் செல்லும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காண்த்தா அவர்களுக்கு நேற்று இரவு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் விசேட பிரியாவிடை வைபவமொன்றை நடத்தினார்.

அசோக் கே காண்த்தா 2009 ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கான உயர் ஸ்தரினகராக கடமைகளை பொறுப்பேற்றார்.இலங்கையில் பதவியிளை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகராக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2009 ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார்.

அசோக் கே காண்த்தா அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை உபசாரத்தில் கருத்துரைத்த அமைச்ச் றிசாத் பதியுதீன்,

இலங்கையில் போர் காலத்திலும்,அதனை தொடரந்து வந்த காலங்களிலும், இலங்கை மக்களுக்கு குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உதவி செய்யும் ஒருவராக அசோக் காண்த்தா இருந்துள்ளதாகவும்,அவரது சேவை காலத்தில் இந்தியா-இலங்கை உறவு பல் துறையிலும் நன்மையடைந்துள்ளதாகவும் இங்கு குறிப்பிட்டார்.இந்த பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர்கள்,மற்றும் பன்னாட்டு தூதுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.