Header Ads



அம்சாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா..?


(ADT) பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட யுத்த சூனிய வலயம், இலங்கையின் கொலைக்களங்கள் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகத்தின் தலைமைப் பிரதிநிதி பி.எம்.அம்சா பிரித்தானியாவின் தொலைக்காட்சி சேவையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகளை வெளிப்படுத்தும் இலங்கையின் கொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனிய வலயம் எனும் காணொளிகளை சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்டது. 

ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. 

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதரகத்தின் தலைமைப் பிரதிநிதி பி.எம்.அம்சா, இந்த காணொலியின் மூலப் பிரதியை வழங்குமாறு பிரித்தானியத் தொலைக்காட்சியை கேட்டுக் கொண்டுள்ளார். 

அது விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதேவேளை, சாட்சிகள் தமிழில் கூறியதை, தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, தவறாக மொழிபெயர்ப்புச் செய்து, பாரிய தவறிழைத்துள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியையும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார். 

விடுதலைப் புலிகள் சாதாரணமான தீவிரவாதக் குழு அல்ல என்றும், இராணுவத்தினரிடம் பிடிபட்டால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வதற்காக அவர்கள் எல்லோரும் சயனைட் அணிந்திருப்பர் என்றும் அம்சா கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.