கிழக்கு முதலமைச்சருடன் பாகிஸ்தான் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் காசிம் குறோமி உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டடு திருகோணமலைக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் அப்துல் மஜித்தை உட்துறைமுக வீதியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில் மாகாண பிரதம செயலாளர் அபேகுணவர்தனவும் உடனிருந்தார். கிழக்கு மாகாண முதல் அமைச்சர் புதிதாக தெரிவான பாகிஸ்தான் பிரதமருக்கு தனது வாழ்த்துக்களையும் இதன் போது தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகள் பற்றி முதலமைச்சரிடம் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
Post a Comment