Header Ads



பொதுபல சேனாவிடமிருந்து வெளிப்படும் கருத்துக்கள் அபாயகரமானவை - அமீன்


பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அமெரிக்கா சென்றுவந்த பின்னர் அவர்களிடமிருந்து வெளிப்படும் கருத்துக்கள் அபாயகரமானவையென்று முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பகிரங்க ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனா தெரிவித்துள்ள கருத்துக்கள் இதற்கு ஆதாரமாக அமைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்,

முஸ்லிம் சமூகத்திலுள்ள தனிநபர் செய்யும் காரியங்களுக்கு அல்லது தவறுகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மீதும் பொதுபல சேனா குற்றம் சுமத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. பாபுல் பாகிஸ்தான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதற்காகவோ அல்லது அதனை ஒரு சில முஸ்லிம்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதற்காகவோ ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் குற்றம் சுமத்துவது சிறந்ததல்ல.

அரசாங்க நிறுவனங்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கம் அனுமதித்த ஆடைகளை அணிந்து பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தொழில் உரிமை மறுக்கப்படும் போது நீதி கேட்கவும் முஸ்லிம்களுக்கு அனுமதியுள்ளது. 

இருந்தபோதும் முஸ்லிம்களின் உரிமைகளில் தலையீடு செய்யும் விவகாரத்தை பொதுபல சேனா தற்போது கையிலெடுத்திருப்பது தெளிவாகிறது. சிங்கள சமூகத்தினரிடையே முஸ்லிம்கள் குறித்து தவறான அபிப்பிராயங்கள் மேலோங்க இது வழிவகுக்கும். இந்நிலையில் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் காரணமாகவே இவற்றை முறியடிக்கமுடியும். பௌத்தசிங்கள பேரினவாதிகளிடமிருந்து வெளிப்படும் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் சமூகம் நிதானத்துடன் செயற்படுவது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. BBS COMMENTS CLEARLY WARRANT ACTION TAKEN AGAINST THEM UNDER PREVENTION OF TERRORISM ACT (PTA). WILL THE GOVERNMENT DO IT?

    ReplyDelete
  2. Assalamu alaikum ameen avarkale.neenkal sollum karuththukkal inraiya soolnilaiyel muslum samookaththikku mika avasiya onraakum. Ivatrai sari seiya ellaa muslim arasiyal vaathikal, sattatharanikal.nalla puththi jeevikalai ulladakki naadu poorakum theliyu pirsaaram metkolla vendum. Aththudan moonru molikalilum ippirachaaram velivara vendum. Nnri.

    ReplyDelete
  3. பெளத்த மக்களை நாம் அன்றுதொட்டு இன்று வரை நேசிக்கின்றோம் மட்டுமல்லாமல் அவர்களுடன் அன்னியோன்யமாகவும் பழகுகின்றோம் உறவினர்கள்போலவே வாழ்கின்றோம் மட்டுமல்லாமல் பெளத்ததேரர்களையும் நாம் மதிக்கின்றோம். பொதுலசேன போன்றகுளுக்களின் கருத்துக்களால் நாம் மிகவும் வேதனையடைந்தாலும் ஆத்திரமூட்டுமளவிற்கு அவர்கள் எம்மை மிகவும் இழிவுபடுத்தியபோதும் நாம் இன்னும் பெளத்தர்கள் 99 வீதமானவர்கள் மீது நாம் வைத்துள்ள மரியாதையாலும் அவர்களுடன் நாம் பின்னிப்பிணைக்கப்பட்ட உறவுகளுக்கு ஏதும் பங்கம் விளைவித்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் நாங்கள் எல்லாவகையான மேற்கூறப்பட்ட குளுக்களின் செயல்பாடுகளை இன்னும் தாங்கிக்கொண்டும் பொறுத்துக்கொண்டுமிருப்பது அவர்களை நீங்கள் எமக்காக தட்டிக்கேட்பீர்கள் எமக்காகக்குரல்கொடுத்து நம் உறவுகளை பலப்படுத்துவீர்கள் என்ற நல்லெண்ணத்துடனே. ஆகவே பெளத்த பெரியோர்களெ சகோதர, சகோதரிகளே, தலைமைப்பீட பெரியோர்களை மேற்குறிப்பிடப்பட்டது போன்ற குளுக்கள் சிறுபான்மையான எம்மை கொடுமைப்படுத்துவதை நீங்கள் இன்னும் வளரவிடாமல் தடுப்பதற்குரிய உதவிகளை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்……….

    ReplyDelete
  4. அல்லாஹ் அனைத்துக்கும் போதுமானவன். இக்கயவர்களின் சதிகளைத் தவிடுபொடியாக்கி இவர்களை அழிப்பதற்கு ஒரு வினாடி இறைவனுக்கு மிகுதமே. அவனிடமே தொழுகையிலும், வணக்க வழிபாடுகளின் பின்பும் கை யேந்திப் பிரார்த்திப்போம். அவன் மீதே அசையாத நம்பிக்கை வைப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.