யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மானிப்பாய் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பெரிய மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
ஒஸ்மானியாக் கல்லூரியில் கடந்த மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்ட போது தமக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக வடமாகாண ஆளுநர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 50 துவிச்சக்கர வண்டிகள் இன்றைய தினம் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இவற்றை விட மேலதிகமாக 50 துவிச்சக்கர வண்டிகளும் ஆயிரம் கூரைத்தகடுகளும் விரைவில் அம்மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்படவுள்ளன.
யாழ்.மாநகர உறுப்பினர் சரபுல் அனான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
தமது கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தேவைகளை நிறைவேற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களுக்கும் மக்கள் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் இதன்போது தெரிவித்துக் கொண்டனர்.
இதில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்விலும் அமளி துமளி ஏற்பட்டதாம் .
ReplyDeleteஎந்த பிரச்சினயிருந்தாலும் நெருப்பில்லாம் புகையாது ,
இந்த சமுகம் திருந்தாதுபோலதான் இருக்கு