Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அரசியலமைப்பு..!

(ஏ.எம்.எம் முஸம்மில்)

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சே தலைமையிலான விஷேட கமிடியொன்றின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இவ் உத்தேச யாப்பில் 'நிறைவற்று அதிகாரம்' மட்டுமல்லாது ஜனாதிபதி என்ற என்ற சொற்பதம் கூட அகற்றப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 'ஒரு மக்கள் யாப்பு' தயாராகிக்கொண்டிருக்கின்றது என்பது  ஒரு விஷேட நிகழ்வாகும். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமில்லாத  ஏனைய எதிர் கட்சிகளின் மூலமல்லாது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் இவ் உத்தேச யாப்பு முன் மொழியப்படுவதானது நடைமுறை சாத்தியமானதொரு செயல் என்றே அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

 குறிப்பிட்ட இவ்உத்தேச  யாப்பு ஒரு இறுதித்தீர்வாக  அல்லாது , எதிர்கட்சிகளின் ஆலோசனைகள் மட்டுமல்லாது ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிரேஷ்ட அமைச்சர்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள்  புத்திஜீவிகள்  மற்றும் ஊடகவியலாளர்கள் எனும் பலதரப்பினரது ஆலோசனைகள் விதந்துரைப்புகளும் இதில் சேர்த்துக் கொள்ள படவுள்ளதும ஓர் சிறப்பம்சமாகும் .

உத்தேச யாப்பின்  மூலம்  தற்போது நடைமுறையிலிருக்கும் நிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகாரம் கொண்ட மக்கள் விரோத ஜனாதிபதி என்ற நாமம்கூட அகற்றப்பட்டுள்ளது. இது கடந்த 35 வருடகாலமாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்த மக்களின் வெற்றியாக கருதப்படுகிறது. 

  'ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக  '' நாட்டுத் தலைவர் 'என்ற பதம் உபயோகிக்கபட்டுள்ளதுடன் இப்பதவி நிறைவேற்று அதிகாரமற்ற  இலங்கை பாராளுமன்றதிட்கு வகைகூறக் கூடிய பதவியொன்றாக  சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பாராளுமன்டத்தின் மூலம் தெரிவு செய்யப் படுபவரா? அல்லது தேர்தல் மூலம் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப் படுபவரா? என்பது பற்றி இன்னும் இறுதித் தீர்மானம் குறிப்பிடப் படவில்லை.

'தெரிவாகும் நாட்டுத் தலைவர்  தெரிவானதன் பின்பு அவருக்கு கட்சி அரசியலில் ஈடுபட முடியுமா  முடியாதா என்பது பற்றி பரந்துபட்ட கருத்தாடலின் பின்பு மக்களால் இறுதித் தீர்வு எட்டப்படும்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார்.
'நிறைவேற்று அதிகாரம்' என்பதற்கு பதிலாக மூன்று மாற்றுத் தீர்வுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் ஜனாதிபதிவசம் தற்போதுள்ள நிறைவற்று அதிகாரம் உத்தேச 'நாட்டுதலவர்  பிரதமர் இபாராளுமன்ற சபாநாயகர் தலைமையினலானதொரு கவுன்சிலிடம் அதிகாரம் பகிரப்பட்டிருக்கும் இ
மேலும் நாட்டின் தீர்வுகள் இ மற்றும் முடிவுகள் எடுக்கக் கூடிய  வகையில் அதிகாரம்பெற்ற இரண்டு கவுன்சில்கள் இந்த யாப்பில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

ஒன்றில் பாராளுமன்றத்தின் பிரதமர் எதிர்கட்சி தலைவர்  சபாநாயகர் மற்றும் தேர்தல் மூலம் தெரிவாகும் அனைத்து கட்சிகளினது பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். 

மற்றையதில் மேற்சொன்ன பிரதிநிகளுக்கு பிரத்தியேகமாக  மாகாண சபைகளின் முதலமைச்சர்களுட்பட பரந்துபட்ட அமைப்பில் இருப்பதுடன் இதன் தலைவராக உத்தேச 'நாட்டுத் தலைவர்' காணப்படுவார்.        

அதே வேளை 'உத்தேச நாட்டுத்தலைவர்' தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதாயின் அந்தத் தேர்தலும் இபாராளுமன்றத் தேர்தலும் இமாகாணசபை தேர்தலும் ஏககாலத்தில். ஒரே முறையில் நடாத்தப் படவேண்டும் என்ற மிகமுக்கியமான பிரேரணையும் உள்ளடக்கப் பட்டிருப்பது விசேடமானதாகும்.   

 மாகாண சபை தேர்தலிலும் பாராட்டப்படவேண்டிய நல்லதொரு பிரேரணையை முன்மொழியப்பட்டுள்ளது . அதாவது கூடிய விருப்பு வாக்குகளால் தெரிவாகுபவர் மாகாண முதலமைச்சராகும் அதேவேளை . இரண்டாவதாக கூடிய வாகுகளால் தெரிவாகும் கட்சியிலிருந்தும் ஒரு பிரதி மாகண முதலமைச்சர் ஒருவரும் தெரிவாகுவார். மாகாண ஆளுநர் பதவி இல்லாமலாக்கப்படும். அத்துடன் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் விகிதத்தின் அடிப்படையில் ஒரு அமைச்சுபதவி வழங்கப் படுவதால் குறைவாக வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கும் அமைச்சு பதவியொன்றை பெற்று ஆட்சியில் பங்காளிகளாக முடியும்.
    
இப் பிரேரணைகளில் முக்கியமாக கருதப்படக்கூடிய இன்னுமொரு விடயம் யாதெனில் 25 உறுப்பினர்களுக்குள் அமைச்சரவை (கபினட்) வரையறுக்க பட்டுள்ளதாகும். அத்துடன் இன்னுமொரு விஷேட அம்சம் யாதெனில் ' சட்ட யாபிட்கான நீதிமன்றம் ' ஒன்றும் சிபாரிசு செய்யாப்பட்டுள்ளதாகும்.

ஐந்து சுயாதீன கமிசன்களை நிறுவ பிரேரிக்கபட்டுள்ளதுடன் சுயாதீன ஊடக கமிசன் ஒன்றும் இதில் உள்ளடக்காப்பட்டுள்ளது .

குறிப்பிட்ட இந்த யாப்பிட்காக பொதுமக்களின் ஆலோசனைகளும் எதிர்பார்கப்பட்திருப்பதால் இது நடைமுறை சாத்தியமானதொரு மக்கள் போராட்டத்தால் கைகூடுவதட்கான வாய்புகள் உள்ளதாகவே கருதப்படுகின்றது .     

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நிறைவேற்று அதிகாரம் இல்லாத,
    கருத்து சுதந்திரம் மிக்க ,
    ஊடக சுதந்திரம் மிக்க,
    சம நீதியை வலியுறுத்தக்கூடிய ,
    சுயாதீன நீதித்துறையைக்கொண்ட,
    இனவாதம் இல்லாத,
    மக்களால் மக்கள் ஆளப்படக்கூடிய ஒரு நல்ல அரசியல் யாப்பு இன்றைய இலங்கைக்கு ஒரு கட்டாய தேவையாக உள்ளது....

    ReplyDelete

Powered by Blogger.