Header Ads



வடக்கில் இனங்களுக்கிடையே முறுகலை எற்படுத்த பொதுபல சேனா முயலுகிறதா..?

(சத்தார் எம்.ஜாவித்)        

வடக்கில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை  கடந்த மூன்று தஸாப்த காலமாக ஆட்டிப்படைத் கொடிய யுத்தம் அவர்களை பிரித்து சின்னா பின்னமாக்கியது மட்டுமல்லாது  பலர் காணமால்போயும். இன்னும் பலர் கொடிய யுத்த அரக்கனின் இரைக்குப் பழியாகியும், மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் அங்கவீனர்களாகவும், அநாதைகளாகவும். விதவைகளாகவும் ஆக்கிவிட்டதை இலங்கையர் எவரும் மறந்துவிட முடியாது.

இவ்வாறு கொடிய யுத்த அரக்கனின் கோரம் நாடு, தேசம் இல்லாமல் அனைவரையும் துரத்தியது.  ஏதோ ஒரு வகையில்  மேற்படி கொடூரங்களில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றி மக்கள் ஒருவாறு அமைதியாகவும், அச்சமின்றியும் வாழும் சூழழை ஏற்படுத்தியதன் விளைவாக வடக்கில் இருந்து உள்நாட்டுக்குள்ளும், கடல்கடந்த நாடுகளுக்கும்  சிதறிய மக்கள் மீண்டும் தமது தாயகத்திற்கு திரும்பி சிறுகச் சிறுக மீளக் குடியேற வழி சமைத்துள்ளது.

யுத்தத்திற்கு முன் ஒற்றுமையாக வாழ்ந்த வடகிழக்கு சிறபான்மைச் சமுகங்கள் தற்போது தமது சொந்த இடங்களில் தமது இருப்புக்களை நிலை நிறுத்தி வரும் இத்தருணத்தில்  இம் மக்கள் இன்று பல்வேறு தடைகளுக்கும்,  இன்னல்களுக்கும் முகம் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளும் கூடவே காணப்படுகின்றது.

வடக்கைப் பொறுத்த மட்டில் ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடத்தில் யுத்தம் சில மக்களின் மனங்களை மற்ற வைத்துள்ளது மேலும் சில மக்களை யுத்தத்திற்கு முன் எவ்வாறு இருந்தார்களோ அந்த விதத்தில் ஒற்றமையையும் சமாதானத்தையும் விரும்பும் மக்களாக வைத்துள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இன்று வடக்கில் இருசாரார் காணப்படுகின்றனர் ஒரு சாரார் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் வரவழைத்து மீளக்குடியமர வைக்கும் ஆதரவுள்ளவர்களும், மற்றொருசாரார் முஸ்லிம்கள் தமது பூர்வீகங்களில் குடியேறுவதை விரும்பாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இருந்தும் அதிகமானவர்கள் தம்முடன் முஸ்லிம் மக்கள் வந்து மீளக் குடியமர்ந்து முன்புபோல் வாழ்வதையே விரும்புகின்றனர். இவர்கள் இனமத பேதமின்றி வாழ்வதை நோக்கக் கொண்டுள்ளனர் அப்போதுதான் சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என எண்ணுகின்றனர்.

தற்போது வடக்கில் மீள் குடியேற்றம் தமிழ் மக்களுக்கு பூரணப்படுத்தப்பட்டாலும் முஸ்லிம் மக்களுக்கு அது காணல் நீராகவேயுள்ளது. இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் ஒரு சிறு தொகையினரே முஸ்லிம்கள் அடங்குகின்றனர்.

இவ்வாறு மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் நிலைமைகளை அவதானித்தால் அதில் பெரும்பாலானவர்கள் இன்னும் தமக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது தற்காலிக கொட்டைகைகளிலும், மர நிழல்களிலும் வாழும் நிலைமைகளை ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்துவதை  காணக் கூடியதாகவுள்ளது.

இந்ந நிலைமைகளில் தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக இனவாத பொதுபல சேனா அமைப்பாலும்  இன்னும் சில இனவாத அமைப்புகளாளும்  சமயங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் அடாவடித்தனம் இம் மக்களை யுத்தத்தின் பின்னரும் நிம்மதியற்ற, அமைதியற்ற நிலைமைகளுக்கு இட்டுச் செல்கின்றது.

ஏதோ ஒரு வகையில் மீளக் குடியமர்ந்து வரும் மக்களை அவர்களின் நிம்மதியற்ற நிலைமைகளுக்கு மேலும் இட்டுச் செல்வதற்கு முனைகின்றமை மேலும் ஒரு அபாய கட்டத்திற்கு இலங்கையை இட்டுச் செல்வதற்கான முனைப்பாகவுள்ளதாக  புத்தி ஜீவிகள் கவளை தெரிவிக்கின்றனர்.

மேற்படி இனவாத விஷமிகள் தெற்கில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டு போதாக் குறைச்சலுக்கு வடக்கிலும் தமது இனவாத செயற்பாடுகளை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவிக்கின்றன. இதேபோல் கிழக்கிலும் தமது நடவடிக்கைகளை மேற்கொள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

இக்குழுவினரின் சகல செயற்பாடுகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது பெரும்பான்மை சமுகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர அணைத்து மக்களும் இனவாத பொதுபலவினதும் அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மேலும் சில இனவாத விரோதிகளின் செயற்பாடுகளை முழு மூச்சுடன் எதிர்த்து வருவதையும் காணக்கூடியதாகவள்ளது. மேலும் வெளிநாடுகளில் கூட இவர்களின் செயற்பாடுகளுக்கு அடிவிழும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் பொதபல செனாவின் அமெரிக்க விஜயம் அங்கு இவர்களின் தந்திரம் பலிக்கவில்லை அவர்கள் அடித்து தரத்திவிட்டார்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் ஒற்றுமையாக வாழவுள்ள சமுகத்தை குழப்பி இனவாத செயற்பாடுகளுக்கு முனையும் பொதுபலசேனா விடயத்தில் வடகிழக்கு மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டிய காலமாகும். வெளிநாட்டிலேயே இவர்களுக்கு இந்த நிலையென்றால் வடகிழக்கு மக்களும் அவதானமாக இருந்து இவர்களின் பிரசன்னங்களை தடுப்பதற்கான துணிச்சல்கள் தேவை.

இவர்கள் சிறுபான்மைச் சமயங்களை கூறுபோட்டு சிதைக்கும் கெட்ட செயற்பாடுகளை கொண்டுள்ளதால் வடகிழக்கு மக்கள் இவர்களின் விளையாட்டுக்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் விலை போய்விடக் கூடாது என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுபல சேனா ஏதோ ஒரு விதத்தில் வடக்கு மக்களையம் தமது தீண்டலுக்கு உட்படுத்த முயல்வதை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான புத்திசாலித்தனமும், அவதானமும், அவசரமும் வடக்கு வாழ்  தமிழ், முஸ்லிம் மக்களுக்குத் தேவை.

வடக்கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவுகளில் மேலும் விரிசல்களையும், பிணக்குகளையும் ஏற்படுத்த இவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின்  மறைமுகமான பாரிய ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை அவர்களின் நாளாந்த செயற்பாடுகள் வெளிக்காட்டுகின்றன. இதில் குறிப்பாக தமிழ் மக்களிடத்திலிருந்து முஸ்லிம் மக்களை பிரிப்பதற்கு அல்லது ஓரங்கட்டுவதற்கு பாரிய திட்டங்களை வகுத்தவருவதும் அவதாணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் இனவாத அமைப்பக்களின் செயற்பாடுகளுக்கு குறிப்பாக வடகிழக்கில் முற்றுப்புள்ளி வைக்கத் தவறும் பட்சத்தில் வடக்கிலிருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் கடலுக்குள் விரட்டப்படும் நிலைமைகளும் ஏற்படலாம்.

எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வெண்டிய காலம் தற்போத கணிந்துள்ளது. 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' என்பதற்கமைவாக இனியும் விதண்டாவாம் பேசாமல் தமிழ், முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றினைந்து தமது மக்களை ஒற்றுமையாக ஒரு கட்டுக்கோப்புக்குள் வழி நடத்திச் செல்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

No comments

Powered by Blogger.