இலங்கையில் தேங்காயின் அளவு சிறியதாகியது..!
தேங்காய்கள் சிறிய அளவினதாகக் காணப்படுகின்றமையினால், தேங்காய் சார்ந்த உற்பத்திகளுக்கு இரண்டு மடங்கு தேங்காயினைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நிலவிய வரட்சி காரணமாக தேங்காய்களின் அளவு சிறிதாகியுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த குணதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, வரட்சியினால் இந்த வருடம் 300 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இந்த வருடம் 2800 மில்லியன் தேங்காய்கள் கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டது.
கடந்த வருடம் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நிலவிய வரட்சி காரணமாக, தற்போது கிடைக்கும் 50 வீதமான தேங்காய்களின் அளவு சிறிதாகக் காணப்படுவதாக நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் முதல் நிலைமை வழமைக்கு திரும்புமென ஜயந்த குணதிலக்க சுட்டிக்காட்டினார். மழையுடனான வானிலை தொடரும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். Nf
Post a Comment