கல்முனை மாநகர சபை கண் திறக்குமா...?
(அபூ ஆதில்)
கல்முனை மாநகர எல்லைக்குள் 25410 மக்கள் தொகையையும் 4.65 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட பெரிய ஊர் சாய்ந்தமருது. மிகவும் சன நெரிசலான இந்த ஊரை தோணா (வடிகான்) ஒன்று ஊடறுத்துச் செல்கின்றது நிந்தவூர் வெட்டு வாய்க்காலில் ஆரம்பித்து சாய்ந்தமருது (முகத்துவாரம்)படகுத்துறையில் முடிவடையும் இந்த தோணா நிந்தவூர் வெட்டு வாய்க்காலினதும் மழைகாலங்களில் இப்பிராந்தியத்தினதும் பிரதான வடிகானாகவும் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைக்கும் படகுத் துறைமுகமாகவும் பயன்படுகின்றது. கடந்த 2004 சுனாமியின் போது இப்பிராந்தியத்தை ஊடறுத்த நீரை அவசரரமாக வெளியேற்ற இந்த தோணா வே பாரிய உதவியாக அமைந்தது.
இன்று இந்தத் தோணா கவனிப்பார்கள் அற்ற நிலையில் கழிவுகளைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது. கால்நடைகளை அறுக்கும் போது வரும் தோல்,எலும்பு மற்றும் வீட்டுக்களிவுகள் அன்றாடம் இரவு வேளைகளில் இங்கு வந்து கொட்டப்படுகின்றன.
தோணாவை அண்டிய பிரதேசம் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகின்றது. மாடு,ஆடு போன்றவற்றின் மேச்சல் தளமாகவும் இரவு வேளைகளில் நாய்களின் விளையாட்டு மைதானமாகவும் கிருமிகளின் மொத்த உறைவிடமாகவும் தோணாவும் அதனை அண்டிய பிரதேசமும் மாறியுள்ளது.
பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியும் பணிமனையும் உள்ளது அவர்கள் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என புரியவில்லை. மாநகர சபையும் சாய்ந்தமருதில் முதல்வரும் இருக்கின்றனர் அன்றாடம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வாரத்துக்கு ஒரு தடவை கழிவுகளை ஏற்றும் வாகனம் வருகிறது அதுவும் அநேக நேரங்களில் ஏனைய பிரதேச கழிவுகளை ஏற்றிக்கொண்டே வருகின்றது அதுவும் கழிவுகளை ஏற்றும் ஊழியர்களின் கைகளில் கொடுத்தால் மட்டுமே எற்றுகின்றார்கள் தரையில்கிடக்கும் கழிவுகளை அள்ளி எடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை.
மாடுகளை அறுத்து விற்பனை செய்வதற்காக மாநகரசபை வருடாவருடம் இலட்சக்கணக்கில் விற்பனையாளர்களிடம் இருந்து பணத்தைப் பெறுகின்றது ஆனால் அவர்கள் மாடுகளை அறுப்பதர்க்கான மாட்டு மடுவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதன்காரணமாக அவர்களும் நிகழ்வுகளுக்காக மாடு மற்றும் ஆடுகளை அறுப்போர் தோணா போன்ற இடங்களிலும் கழிவுகளை வீசி விடுகின்றனர்.
சாய்ந்தமருதில் மாநகர முதல்வர்,பாராளமன்ற உறுப்பினர்,மாகாண சபை உறுப்பினர்,மாநகர உறுப்பினர்கள்,பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி,பிரதேச செயலாளர் என துறை சார்ந்த தலைவர்களும் அதிகாரிகளும் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் தோணாவை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலோ அல்லது அதில் போடப்படும் கழிவுகளை அகற்றுவது தொடர்பிலோ எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
கல்முனை மாநகரசபை பல நாடுகளுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் இணையச்செய்திகளிலும் பத்திரிகைகளிலும் காணமுடிகிறது கல்முனை மாநகரசபை சாய்ந்தமருது தோணா விடையத்தில் அசமந்த போக்கைக்கடைபபிடிப்பதை மக்கள் மிகுந்த விசனத்துடன் நோக்குகின்றனர்.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது கல்முனை மாநகரசபையின் தற்போதைய முதல்வரும் மூன்று உறுப்பினர்களும் சாய்ந்தமருதை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் சாய்ந்தமருதின் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை இவர்களால் ஏற்படுத்த முடியாதுள்ள இந்தச் சூழலில் தனியாகச்சென்று எதைத்தான் சாதிக்கப்போகின்றார்கள் என மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.
வெறும் கட்டிடங்களை கட்டி திறப்பதை விட அன்றாடம் கழிவுகள் அகற்றப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்.
கல்முனை மாநகர சபையே! சாய்ந்தமருது தோணாவை நோக்கி உனது பார்வையை செலுத்து.
இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு, சாய்ந்தமருதை ஒரு தனிப்பிரதேசமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவெடிக்கைகளை முழுவீச்சில் ஆரம்பிக்க வேண்டும். காரணம், சாய்ந்தமருது கல்முனையுடன் இருப்பதால்தான் புறக்கநணிக்கப்படுகிண்றது. தனிப்பிரதேசமாகிவிட்டால், அதனூடாக கிடைக்கப்பெறுகின்ற மொழு வருமானத்தையும் தனது சொந்த ஊருக்கே பங்கிடலாம், அனைத்து வேலைகளையும் தன்னகத்தே தீர்மானிக்கக்கூடிய முழு அதிகாரம் கிடைக்கும்.
ReplyDeleteஆனால், தற்போது, கல்முனை மாநகருக்கு சாய்ந்தமருது மக்கள் வரி கட்டுகின்றார்கள் ஆனால் எந்த சேவையும் அந்த மக்களுக்கு கிடைப்பதில்லை. இதற்க்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சாய்ந்தமருது, கல்முனை குடி, மருதமுனை என்ற பிரதேச வாதம் மீக நெடுங்காலமாக காலத்துக்கு காலம் எதோ ஒரு உள்நோக்கத்த்டுடன் கிளம்ம்பி விடுகிறது.
ReplyDeleteதேர்தல் காலங்களில் விஸ்வரூபம் எடுக்கும். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இதனை நன்கு உணர்ந்திருந்தார். அவருடைய நோக்கமும் இலட்சியமும் கல்முனை நகரை தென் கிழக்கு அலகின் தலை பட்டணமாக ஆக வேண்டும் என்பதுதான். இதற்காக அவருடைய அமைச்சில் கல்முனை டவுன் ப்லான்னிங் என்ற ஒரு யூனிட்டை அமைத்து ஊரு மாபெரும் திட்டத்ததை உருவாக்கினார். ஆனால் அவர் மறைவுக்கு பின் அந்த கல்முனை ப்லான்னிங் ப்ரொஜெக்ட் என்ன ஆனதோ தெரியவில்லை. சைந்தமருதுக்கு வேறாக ஒரு பிரதேச சபை வேண்டும் என்ற கோரிக்கை அப்பொழுதும் இருந்தது. ஆனால் அதை அவர் விரும்பவில்லை.
அதற்கான காரணம் சாய்ந்தமருது வரலாற்றில் ஒரு முப்பது வருடங்களை எடுத்து பார்த்தால் யாரவது ஒரு அங்கவீனர் அல்லது கல்வி அறிவில்லாதவர் தான் தலைவர்களாக வந்தார்கள். கிராம சபையில் கொஞ்சமாவது எழுத வாசிக்க தெரிந்தே இலிகிதரே நிரவாகத்தை நடத்தினார். கொழும்பில் இருந்து ஒரு அமைச்சர் சைந்தமருதுக்கு வந்தால் அவருடன் நேர்முகமாக கதைப்பதுக்கு கூட முடியாத கல்வி அறிவே அவர்களுக்கு இருந்ததது.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. அதன் ஷக்தியும் மதிப்பும் மிக உயர்ந்து நிற்கும் . மேல காட்டிய உதாரணம் மிகச் சிறிய ஓரி பிரச்சினை. இதனை இப்போதுள்ள மேயர் ஆல் ஒரு தொலை பேசி அழைப்பில் செய்ய முடியும். யாரவதி இதனை மேயரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்களா?
என்பது தான் இங்கு கேள்வி....