Header Ads



எதிர் காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றுபடுமாறு பஷில் ராஜபக்ஷ அழைப்பு


(தொகுப்பு - இர்ஷாத் றஹ்மத்துல்லா)

அன்று புலிகளிடம் அனுமதி பெற்றதன் பின்னரே மடு தேவாலயத்துக்கு  சென்ற கத்தோலிக்க மதகுருமார்களும்,அன்றைய நிலையினை மறந்தது போல் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்,சிங்கள,தமிழ்  மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போது சில அரசியல் சுயநலவாதிகள் தடுக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்             
            
(மதவாச்சி முதல் மடு வரைக்குமான புகையிரத சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிங்கள மொழில்  ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவத்தையும் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.)

வடக்கையும்,தெற்கையும் இணைக்கின்ற பிராதான பாதையாக இது காணப்படுகின்றது.நான் நிணைக்கின்றேன்.இந்த பாதை விடுதலைப் புலிகளினால் சிதைக்கப்பட்ட பாதையாகும். அநுராதபுரம்,மதவாச்சி ஊடாக மடுவிற்கு இப்புகையிரதம் வந்துள்ளது.இது நினைவுபடுத்தப்பட வேண்டிய நிகழ்வாகும்.அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  2004 ஆம் ஆண்டு பெருந்தெருக்கல் அமைச்சராக இருந்த போது மடு பாதை புனரமைக்கப்பட்டு அதனை திறப்பதற்கு அன்று அவர் வருகை தர வேண்டும் என்று இருந்த போதும்.இப்பிரதேசத்துக்குள் அவர் வரவேண்டும் என்றால் விடுதலை புலிகளிடம் அனுமதிப் பெற்றிருக்க வேண்டும்.ஏனெனில் அன்று ரணில் விக்ரமசிங்கவுக்கும்,பயங்கரவாதிகளுக்குமிடையில் இருந்த மோசமான ஒரு ஒப்பந்தமாகும்.அன்று இந்த விடுதலைப் புலிகளின் பரிபாலனத்துக்குட்பட்டதாக இருந்த மடு மாதா தேவாலயத்திற்கு பிரதமரோ அல்லது அமைச்சரோ எவர் வருவதாக இருந்தாலும் அவர்களும் அனுமதி பெறவேண்டிய ஒரு துரதிஷ்டவசமான நிலை காணப்பட்டது.

அவர்களிடம் அனுமதிக் கேட்டுத்தான் வர வேண்டும் என்ற நிலை இருக்க முடியுமெனில் அதனை செய்ய முடியாது என நிராகரித்தார்.அதன் பிறகு இந்த பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வாக்களித்து 2005 ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவர் வந்த போது,அவரிடம் மக்கள் முன் வைத்த முதலாவது கோறிக்கை தான் இந்த நாட்டில் காணப்படும் பயங்கரவாதத்தை ஒழித்து சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசிக்க வழி அமைத்து கொடுங்கள் என்பதாகும்.அதற்கு அமைய பாதுகாப்பு தரப்பினர்கள் தமது உயிரையும் இந்த நாட்டுக்கும் மக்களுக்குமாக சமர்ப்பணம் செய்து,9 மாகாணத்தையும்,25 மாவட்டத்தையும்,,பிரதேச செயலகம் 330 ஜயும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு முடியுமாகியது.அதன் மூலம் தான் இந்த மடு திருத்தலத்துக்கு நீர்கொழும்பு முதல்  நாட்டின் நாலா பாகத்திலிருக்கும் கத்தோலிக்க மக்கள் அச்சமின்றி இங்கு வரமுடிகின்றது..சிலருக்கு எல்லாம் மறந்து போய்விட்டது.அன்று புலிகள் கொடுத்த படிவங்களை நிரப்ப வேண்டியிருந்தது என்பதை துரதிஷ்டம் சில கத்தோலிக்க மத குருமார்களும் அன்றைய நிலையினை மறந்துள்ளார்கள்.அவர்கள் மடு தேவாலயத்துக்கு வருவது என்றாலும் 3 விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததை,விடுதலை புலிகளின் அனுமதியில்லையெனில் அவர்களுக்கு மடு தேவாலயத்துக்கு வரமுடியாது.இன்று அவ்வாறானதொரு சூழ் நிலையில்லை.மாறாக இன்று எந்த நேரத்திலும் அச்சமின்றி மடு தேவாலயத்திற்கு கத்தோலிக்க மக்கள் வர முடியும்,அதுவும் புகையிரதத்தில் வநதிறங்கக் கூடிய சூழ் நிலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

சிலர் அதனை மறக்க பாரக்கின்றனர்.எம்மிடம் சிலர் கேட்கின்றனர்.எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்.எத்தனை பேர் கொலை செய்யப்பட்டனர்,எத்தனை புகையிரதங்கள்,மற்றும் பயணிகள் பேரூந்துகள் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின,வெடிக்கப்பட்ட குண்டுகள் எத்தனை என, இவைகள் பற்றி விடுதலைப் புலிகளிடம் தான் கேளுங்கள்,எம்மிடம் அதனை கேட்டால் அரசு ஒரு குண்டைக் கூட வெடிக்க வைக்கவில்லை.ஒரு கட்டிடடத்தை கூட தாக்கி அப்பாவி மக்களை பலியாக்கவில்லை.இந்த நாட்டில் வாழும் எந்த இனத்தையும்,மதத்தையும் சார்ந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை இந்த பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது என்பதை தான் கூறுவோம்.
.இந்த நிகழ்வு வெறுமனே புகையிரத சேவையினை ஆரம்பிக்கும் ஒரு நிகழ்வல்லாது முழு இலங்கை மக்களுக்கும் பிரகாசத்தையும்,சுபீட்சத்தினையும்,ஏற்படுத்திக் கொடுக்கும் ஒன்றாக தான் பார்க்கின்றேன்.

அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதீயுதீன் அவர்கள்,சிங்கள மக்களையோ,முஸ்லிம் மக்களையோ மீள்குடியேற்ற முயற்சிக்கவில்லை.மாறாக தமிழ் மக்களையே மீள்குடியேற்றும் பணியினை செய்தார்.அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.எம்மில் இனவாதம்,மத வாதமில்லை,மக்களின் மேம்பாட்டுத்திட்டம் என்னும் இலட்சியமே இருக்கின்றது.ஆனால் சிலர் தமது அரசியல் லாபங்களுக்காக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள்,சிங்களவர்கள்,தமிழர்கள் மீள்குடியேறவருகின்ற போது,அதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றார்,அது அவர்களால் இந்த மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகுமட்டுமல்லாது,வடக்கில் வாழும் அனைத்து மக்களுக்கும் செய்யும் அநியாயமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.நாங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் வடக்கை அபிவிருத்தி செய்யும் பணியில் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற  அழைப்பை விடுக்கின்றேன்.

கடந்த 3 வருடங்களுக்குள் சர்வ நாடுகள் வழங்கிய நிதி உதவிகளில் 80 சதவீதம்,வடக்கின் அபிவிருத்திக்கே  செலவழிக்கப்பட்டுள்ளது..இந்த பாதைகளை அமைக்கும் போது சிலர் ஏன் இதனை புனரமைக்கின்றீர்கள்,எதற்கு மின்சாரத்தை  வழங்குகின்றீர்கள் என்று எம்மிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே இருந்தனர்.நாம் பாதைகள்,மின்சாரம்,புகையிரத பாதை மட்டுமல்ல கட்டுக்கரை குளத்தை புனரமைத்து விவசாயிகளுக்கு உதவி செய்தோம்,அது போல் கிராமங்கள் தோறும் இருந்த குளங்களை கண்டுபிடித்து அவற்றை புனரமைப்பு செய்து மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுத்தோம்,வடக்கில் கல்வி துறையின் மேம்பாட்டுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்தோம்,வடக்கில் எந்த ஒரு பாடசாலையினையும் மூடிவிடாது அவற்றை இயங்கச் செய்தோம்.வடக்கில் ஒரு வைத்தியசாலையேனும் மூடப்படவில்லை.முல்லைத்தீவு வைத்தியசாலை,கிளிநொச்சி வைத்தியசாலையினை இன்று நீங்கள் போய் பார்க்கலாம் அங்கசம்பூர்ணமான வசதிகளுடன் கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அதிகமான தமிழ் தலைவர்களை கொண்றார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை படுகொலை செய்வதற்கு 13 முறை முயற்சித்தார்கள் அது அவர்காளல் முடியாமல் போனது.எதிர் காலத்தில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடை பெறவுள்ளது.அப்போது போலி முகமூடிகளை அணிந்து கொண்டு சிலர் வருவார்கள்,அவர்கள் சொர்க்க லோகத்தை காட்டுவதாகவும்,சுகமான வாழ்க்கையினை தருவதாகவும் கூறுவார்கள், அந்த பசப்பு வார்த்தைகளுக்கு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.வடக்கில் அதிகமான பகுதிகளின்   மீள்குடியேற்றப் பணிகளை நாம் பூர்த்தி செய்துள்ள போதும்,இன்னும் சில எண்ணிக்கையிலானவர்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர்.அவற்றை நாம் செய்ய முற்படுகையில் அதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளன.வடக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்தையும் எதிர் காலத்திலும் தொடராக நாம் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

இன்று உங்களுக்கு ஜனநாயக சூழலை ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்தி தந்திருப்பதை போன்று, எதிர் காலத்தில் ஏற்கனவே இழக்கப்பட்ட உயிர்களை தவிர ஏனையவற்றை பெற்றுத் தரவும் அவர் தயாராக இருக்கின்றார்.அதே போன்று மக்களாகிய நீங்களும் உங்களது கடமையினை அரசுக்கு செய்ய வேண்டும். மீண்டும் அந்த இருள் சூழ்ந்த காலத்துக்கு செல்லாமல்,இரண்டு பரம்பரைகளுக்கு கிடைக்காமல் போன அந்த சுபீட்சத்தை, அபிவிருத்தியினை மீண்டும் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நீங்களும் அடைந்து கொள்ளுங்கள்.

இறந்த காலத்தை நினைவு கூர்வதை மட்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அதற்காக,இறந்த காலத்தில் வாழ்ந்துவிடாமல்,எதிர் காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றுபடுமாறு அழைப்புவிடுப்பதாகவும் அமைச்சர் பஷில் ராஜபகஷ தமதுரையில் கூறினார்.

No comments

Powered by Blogger.