சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்ற கிண்ணியா நகரபிதா ஹில்மி நடவடிக்கை
(அபூ அஹ்ராஸ்)
கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கை சம்பந்தமான கலந்துரையாடல் நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நகரபிதா மண்டபத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா நகரசபை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள் பைசல் நகர் சின்னத்தேபாட்டத்தில் கொட்டப்பட்டு நிலையில் அவற்றை இனிவரும் காலங்களில் பயனுள்ள முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இல்லையெனில் அக்கழிவுகளால் இயற்கைச் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினை தடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்கான ஒன்றுகூடல் நகரபிதா தலைமையில்; நடைபெற்றது.
நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் பிரிகையடையக் (உக்கக்) கூடிய கழிவுகள், பிரிகையடையாத கழிவுகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு அவற்றில் பிரிகையடையக் (உக்கக்) கூடிய கழிவுகளை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் தரம் பிரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்கு உட்படுத்தி பசளைகளாக மாற்றுவதாகவும் பிரிகையடையாத கழிவுகளை சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக புதைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே கழிவுகளை சேகரிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும், இதற்கான ஒத்துழைப்பு உதவிகளை கரையோர பாதுகாப்பு திணைக்களம் வழங்கவிருப்பதாகவும் இதன் தொடர் நடவடிக்கைகளை கிண்ணியா நகரபிதா எம்.எம்.ஹில்மி தலைமையில் முன்னெடுக்கவிருப்பதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வின் போது கிண்ணியா நகரபிதா எம்.எம்.ஹில்மி, கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment