Header Ads



அம்பாறையில் மகேசன் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி


(எஸ்.அஷ்ரப்கான் )

கிழக்கில் ஏற்பட்ட மகேசன் மினி சூறாவளியினால் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும் மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகை அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் சம்மேளத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் சம்மேளத்தின் உயர்பீட தலைவர் ஏ.எம்.ஏ. சலாம் தலைமையில் அண்மையில் சம்மேளத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள்
மற்றும் மீனவர்கள் சம்மேளத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.ஹமீட் மற்றும் அம்பாறை மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட 120 மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதுடன்
அண்மையில் ஏற்பட்ட மகேசன் மினி சூறாவளியினால்  கல்முனை பிரதேசத்தில் 5 மீன்பிடி படகுகளும், 10 சிறிய இயந்திரப் படகுகளும், 60 தோனிகளும் மற்றும் 300 துண்டு வலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் சம்மேளத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.ஹமீட் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.