கத்தாரில் சிங்களத்தில் இஸ்லாமிய சொற்பொழிவு
(நாகூர் ழரீஃப்)
முஸ்லிம் அல்லாத மாற்று மதச் சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவையும் அது பற்றிய உண்மைத் தகவல்களையும் எடுத்துச் சொல்லும் ஓர் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையமாகச் செயற்பட்டு வரும் 'கத்தார் கெஸ்ட் செண்டர்' எனும் நிறுவணம் வருடாந்தம் ஆயிரக் கணக்கான பல்நாட்டு மக்களையும் இஸ்லாமிய வட்டத்துக்குள் கொண்டு வந்து சேர்க்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிறுவணத்தில் இஸ்லாமிய தஃவாப் பணியினைத் திறம்பட செய்யும் பல்நாட்டு தாஇக்கள் உள்ளனர். அவர்களுள் பிலிபைன், நேபாளம், நைஜீரியா போன்ற நாடுகளைச் சார்ந்த தாஇக்கள் பலர் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவணத்தின் உயர்பீட தாஇக்களாக டாக்டர் பிலால் பிளிப்ஸ், யூஸுஃப் ஸ்டீஸ் போன்றவர்கள் செய்படுகின்றனர்.
இந்நிறுவனத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் அல்லாத சிங்கள மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டு கத்தாரில் உள்ள சகோதரர்களுக்கு இஸ்லாமிய நெறியின் உண்மைத் தன்மை பற்றிய தெளிவினைக் கொடுக்க வேண்டும் என்ற தூய நோக்கில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (31-05-2013) மாலை 4:00 மணி முதல் அல் அதிய்யா மஸ்ஜித் அருகாமையில் அமைந்துள்ள ஃபனார் மண்டபத்தில் 'ஹலால் என்றால் என்ன?' எனும் தலைப்பில் சகோதரர் அன்வர் மனதுங்க அவர்களின் சொற்பொழிவு இடம் பெறவுள்ளது.
கத்தார் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் தமது தஃவா உண ர்வினை மையமாகக் கொண்டு தங்களுக்கு அறிமுகமான சிங்கள சகோதரர்களை அழைத்துவருமாறும் அதற்கான முடியுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மேற்படி நிறுவணம் சார்ந்தோரால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்படி நிறுவண இலங்கை தாஇக்களால் இலங்கையைச் சார்ந்த பல இந்து மற்றும் பௌத்த சகோதரர்கள் புனித இஸ்லாத்தை ஏற்று மிகச் சிறப்பாக உள்ளனர் என்பதுவும் ஒரு மன மகிழ்ச்சியான செய்தியாகும். எமது இஸ்லாமிய பண்பாட்டு நாகரிகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மாற்று மதச் சகோதரர்களுடன் எமது பண்பாடுகளுடன் நடந்து இஸ்லாத்தின் தூண்களாகச் செயற்படுவோமாக!
Post a Comment