Header Ads



ஜெய்லானியில் மீறப்பட்ட வாக்குறுதி..!



ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அதனருகிலுள்ள கட்டிடங்கள் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவை மீறப்பட்டுள்தாக பிரதேச முக்கியஸ்தர்கள் முஸ்லிம் அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

முஸ்லிம்கள் தரப்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்னரே ஜெய்லானி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மௌலவி தங்கும் இடம் உள்ளிட்ட மற்றும் சில பகுதிகள் புல்டோசர் மூலம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இடித்துத் தள்ளப்படும் வேகத்தை நோக்குகையில் தாம் அச்சமடைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம் தரப்புக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்லேயே சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதற்கு எதிர்மாற்றமாகவே அங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதேச முஸ்லிம்கள் முஸ்லிம் அமைப்புக்களுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

5 comments:

  1. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தொடர்ந்தேட்சியாக நடைபெறும் மீறப்படும் வாக்குறுதிகள் ..30வருட ஆயுத போராட்டம் முற்று பெற்ற பின்னரும் ....கன கச்சிதமாக தொடர்கிறது.

    ...

    ReplyDelete
  2. Our politicians are busy with forthcoming provincial council elections, don’t disturb them.

    ReplyDelete
  3. Vaakkuruthi koduppathu onru. Athai amulpaduththuvathu innonru. Ivarkalin soolchi mika aapaththaanavai ithai naam anaaivarkalum purinthu seyal pada vendum.

    ReplyDelete
  4. வாக்குறுதிகளை மீறுவது இந்த அராஜகவாதிகளுக்கு ஒண்ணும் புதிய விடயமல்ல. அவர்கள் வாக்குறுதியளிப்பதற்கு எதிர்மாறாகத்தான் நடந்துகொள்வார்கள் என்பதை நாமனைவரும் ஊகிக்க வேண்டும். இதுதான் அவர்களின் மரபு. இந்தக்காட்டுமிராண்டிகளின் அழிவை நோக்கிய பயணம். இதன் பலாபலன்களை இன்ஷா அல்லாஹ் இவர்கள் விரைவில் கண்டுகொள்வார்கள்.

    ReplyDelete
  5. ஜெய்லானி பள்ளி நிர்வாகத்தினருக்கு மத்தியிலும் பாதுகாப்பு செயலாளருக்கு மத்தியிலும் இது சம்பந்தமாக ஒரு பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதென கேள்விப்படுகின்றேன். எனவே அந்நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உண்மையான விடயத்தை கேட்டறிந்து அதனை உங்களது இணையதளத்தில் போட்டால் மிக நல்லதாகவுமிருக்கும். முஸ்லிம் மக்கள் ஒரு தெளிவையும் பெற்றுக்கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.