ஆடு புகைத்த சிகரட்..!
(ஜெம்ஸித் அஸீஸ்)
அன்று வெள்ளிக்கிழமை.
ஜும்ஆவுக்காக மத்திய கொழும்பின் 100 வீத முஸ்லிம்கள் வாழும் பகுதியிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் ஒன்றை நோக்கி நடக்கிறேன். அதானும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் பாதையோரத்தில் ஒருவர் ஏதோ செய்து கொண்டிருக்கிறார். அவரைச் சூழ ஒரு சிறு கூட்டம்.
வீதியோரத்தில் குழுமியிருந்ததனால் ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கக் கூடும் என எண்ணியவாறு நானும் கூட்டத்திற்குள் தலையை நுழைத்தேன்.
தலையே சுற்றியது அங்கு நடந்ததைப் பார்த்தபோது!
அந்தப் பகுதியிலுள்ள ஓர் ஆடு. மத்திம வயதுடைய ஒருவர் தான் புகைத்த அரை குறை சிகரட்டை அந்த ஆட்டுக்குக் கொடுக்கிறார். அதுவும் முகர்ந்து முகர்ந்து சிகரட் புகையை உள்ளிழுக்க முயற்சிக்கிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் 'கவனமாகக் கொடு' என்கிறார். 'இல்லை எப்படி புகைக்க வேண்டுமென்று அதற்கும் தெரியும்' என்கிறார் சிகரட் கொடுக்கும் சாதனையாளர்!
சிறப்புமிகு வெள்ளிக்கிழமை தினத்தில் ஜும்ஆவுக்கான அதான் ஒலித்துக் கொண்டிப்பதையும் அலட்டிக் கொள்ளாமல் இதனை வேடிக்கை பார்க்கும் கூட்டம்தான் அது.
என்ன அநியாயம்! ஆறறிவு படைத்த மனிதன் செய்யும் வேலையா இது?
அவனும் புகைத்தான், அதுவும் புகைத்தது. பகிரங்கமாக நடக்கும் பாவத்தை கையினாலோ நாவினாலோ தட்டிக் கேட்க இயலாமல் என் உள்ளமும் சேர்ந்து புகைந்தது!
அதுதானே ஈமானின் கடைசிப் பகுதி!
why you have entered in to the crowd during Jum-aah time??
ReplyDeleteSiraj,
ReplyDeleteDon't you understand what he wrote in Tamil? He clearly wrote that he had thought that was an accident.
MR Anver siraj, please read one more the article.
ReplyDeleteHe was there to see all this incident till the end... means he has taken much time to understand that it's not an accident...
ReplyDeletenadandhadu pudukada area la thaane unmaya solluga brother?
ReplyDelete