நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்
காத்தான்குடியில் நகரசபையில்...
நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுக,
நகரசபையின் கேள்விச்சபை மற்றும் நிலையியல்க் குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துக,
நகரசபையில் தீர்மானம் எடுக்கப்படாத நடவடிக்கைளை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை நிறுத்துக,
அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இடம்பெறுகின்ற நிதி நடவடிக்கைகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை நிறுத்துக,
பள்ளிவாயல்கள் சொத்துக்களை ஆக்கிரமிப்பதை நிறுத்துக,
நகரசபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்குக,
நகரசபைச் செயலாளரே! சட்டத்தின் வழியில் நகரசபயை வழிநடாத்துக,
போன்ற மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தக் கோரி காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை நாளை காலை 8.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்ல இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கு முன்னால் முன்னேடுக்கவுள்ளனர்.
PMGGயின் ஊடகப்பிரிவு,
காத்தான்குடி
Very good move masha Allah....
ReplyDelete