Header Ads



பார்வையற்ற சிறுவன் முஆஸின் உள்ளம் நெகிலும் கண்ணீர்க் கதை (வீடியோ இணைப்பு)



(அபூ ஸஃத் - ரியாத்)

சிறுவனின் பெயர்: முஆஸ்
நாடு: எகிப்து
முழுக் குர்ஆனையும் மனனம் செய்தபோது வயது: 11 வருடங்கள் 7 மாதங்கள்.

இதோ பார்வையற்ற சிறுவன் பேசுகிறான். கேளுங்கள்,

குர்ஆனின் அரைவாசியை பாடமிட்டு முடித்த வேளையில் படிப்படியாக இருமலால் பாதிக்கப்பட்டேன். 15 ஆம் ஜுஸ்உவில் ஸுரதுல் கஹ்பைப் பாடம் கொடுக்கும்போது பத்து நிமிடம் பாடம் கொடுத்துக்கொண்டு செல்வேன். அரை மணி நேரம் இருமி இருமி சிரமப்படுவேன். இவ்வாறே தொடர்ந்தேன். அதனால், பாடம் கொடுப்பதைத் தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. அப்போது என் அவலம் கண்ட எனது உஸ்தாத் ''சிறுவரே! நீங்கள் வீட்டுக்குச் சென்று, இறைவன் உங்களுக்கு சுகமளித்தால் மீண்டும் வாருங்கள்'' எனப் பணித்தார். சுமார் ஒரு வருடம் குர்ஆனைத் தொட முடியாத நிலைக்கு ஆளானேன்.

நாட்கள் கழியக் கழிய எனது இருமல் அதிகரித்து அதிகரித்து கடும் நோய்வாய்ப்பட்டேன். எனது வாழ்க்கையே இதனுடன் முடிந்து விடும் என்று எண்ணினேன். அப்போது ஒரு நாள் மஃறிப் தொழுகையில் பிரார்த்தித்தேன். ''இறைவா! நான் உனது மார்க்கத்தின் பாதையில் பயணித்தேன். 

நிச்சயமாக நீ நன்மை செய்பவர்களின் கூலியை வீணாக்கமாட்டாய். தொழுகை முடியும் வரை அழுதேன். 

(எனது தந்தை சிலவேளை தொழிலிருக்கும்போது வாகனங்கள் இன்றி என் தாயுடன் நடந்தே செல்வேன். கடும் குளிரிலும், கடும் உஷ்னத்திலும் நடப்பேன்.) 

அதன் பிறகு சரியாக ஒரு மாதம் கழிய என் நோய் பரிபூரணமாக ஒழிந்து குணமடைந்தேன். அதன் பிறகு குர்ஆனை நினைத்துப் பார்க்க முடியாதளவு வேகமாக மனனம் செய்ய ஆரம்பித்தேன்.

நான் என் வீட்டிலிருந்து தூரமான ஓர் இடத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குச் சென்றே குர்ஆனை மனனம் செய்தேன். 

சில நாட்களில் நான் அறவே விளையாடாமல் குர்ஆனை மனனம் செய்வேன். 

எனக்கு இறைவன் பாரிய அருள் புரிந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ். எனது பார்வையை இறைவன் இழக்கச் செய்திருப்பது எனக்கு இறைவன் புரிந்துள்ள விசாலமான ஓர் அருட்கொடை என்றே கருதுகின்றேன். நான் தொழும் எந்தத் தொழுகையிலும் பார்வையை மீட்டித் தருமாறு இறைவனிடம் வேண்டுவதில்லை. ஏனெனில், எனக்கு மறுமையில் அது ஆதாரமாக வருவதற்காக. அதன் மூலம் எனது தண்டனைகள் குறைக்கப்படுவதற்காக. மறுமையில் அல்லாஹ் ''இந்தக் குர்ஆன் விடயத்தில் நீ என்ன செய்தாய்? என்று விசாரித்தால், எனக்கு சிலவேளை வேதனை குறைக்கப்படும், அல்லாஹ் தான் நாடியவர்களை அவனது அருளில் நுழையவைப்பான்.

ஆரோக்கியமான கண்கள் வழங்கப்பட்டுள்ள எத்தனை பேர் இந்தக் குர்ஆன் விடயத்தில் பாராமுகமகாக இருக்கின்றனர். அவர்களுக்கு எது மறுமையில் ஆதாரமாகப் போகிறது?

நபி (ஸல்) கூறினார்கள்: ''யாருக்கு அல்லாஹ் இரு கண்களிலும் சோதனை வழங்கி (பார்வை இழந்து) அவர் பொறுமை செய்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்குவான்''

'' ஒவ்வொரு பெற்றோரும் தத்தம் சிறார்களுக்கு இந்தக் குர்ஆனை மனனம் செய்ய வழியமைத்துக் கொடுக்க வேண்டும். எமது மகன் முஆஸின் மூலம், அவர் குர்ஆனை மனனம் செய்ததன் மூலம் அல்லாஹ் எம்மை கண்ணியப்படுத்தியுள்ளான்'' எனக் கூறுகிறார் அச்சிறுவரின் தந்தை.

நாமும் குர்ஆனை ஓதுவோம், தினமும் அதன் மொழிபெயர்ப்பை எடுத்து வாசித்து விளங்குவோம். அதன் படி நடக்க முற்படுவோம். சிரார்களுக்கு அதனை மனனம்செய்ய வழி அமைத்துக் கொடுப்போம். வல்ல அல்லாஹ் எம்மை நேர்வழியில் வழி நடாத்துவானாக.

http://www.youtube.com/watch?v=N7_u8DgfVpw

2 comments:

  1. யா அல்லாஹ் இந்த சிறுவனுக்கு இந்த உலகத்திலேயே பார்வையை கொடுப்பாயாக என்று எல்லோரும் துஆ செய்வோம்

    ReplyDelete

Powered by Blogger.