சிலாவத்துறை வீதியில் சேதமடைந்த பகுதிகள் திருத்தப்படுமா..?
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை முருங்கன் வீதி சிறப்பான முறையில் வடக்கின் வசந்தத்தின் மூலம் கார்பட் வீதியாக சீரமைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் என்பவற்றின் காரணமாக இவ்வீதி பல இடங்களில் பழுதடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பொற்கேணிக்கும் வேப்பங்குளத்திற்கும் இடையிலான வீதியிலும், அருவியாற்றுப் பாலத்தை அடுத்தும் முருங்கன் பக்கமாகவும் இதனைக்; காணலாம்.
பாதிக்கப்பட்டுள்ள இவ்வீதியை நீண்ட காலமாகியும் சீர்செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையிட்டு இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியின் சேதமடைந்த பகுதியை திருத்தி அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
Post a Comment